மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் விடுபட்டவர்கள் ஜூலை மாதம் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது .

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?

ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் லட்சக்கணக்கான பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தனர் . நிறைய பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசும் சில விதிகளை தளர்த்தி இருந்தது.

இந்த சூழலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி இறுதி செய்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கக்கூடிய மகளிருக்கு வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து மகளிர் உரிமைத்தொகை கிடைக்க இருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியானால் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட இருக்கிறது .

லட்சக்கணக்கானவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து இருந்தாலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் இந்த பலன் சென்றடைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது . இதற்காக தான் அதிகாரிகளை களத்திற்கு சென்று ஆய்வு நடத்தி பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த சூழலில் தகுதி இருக்கிறது, இருந்தும் எனக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என எண்ணக்கூடிய பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வேண்டி மேல்முறையீடு செய்யலாம்.

தகுதி இருந்தும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதுபவர்கள் மேல் முறையீடு செய்யலாம். உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா ஏற்கப்பட்டதா என்பது குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு விடும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால் எந்த காரணத்திற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் அதில் இடம் பெற்று இருக்கும்.

எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மகளிர் கோட்டாட்சியரிடம் சென்று மேல்முறையீடு செய்யலாம். உங்களுடைய செல்போனுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்திருக்கிறது. இ-சேவை மையங்கள் வாயிலாகவும் இந்த மேல்முறையீடு செய்யலாம் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+