சென்னை: தகுதி இருந்தும் விடுபட்ட குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பினை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. வரும் செவ்வாய்கிழமை அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.
வரும் செவ்வாய் முதல் முகாம்: தமிழ்நாடு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமை முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஜூலை 15ஆம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. வரும் செவ்வாய்க்கிழமை அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகை: தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கு தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனக் கூறுபவர்கள் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் இந்த முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்ய முடியும். இந்த முகாம்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆவணங்களுடன் தயாரா இருங்க: பெண்கள் தங்கள் பகுதிகளில் எந்தெந்த தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை வழங்கும் முகாம்கள் நடைபெறுகின்றன என்பதை இந்த தன்னார்வலர்கள் வாயிலாகும் அவர்கள் வழங்கும் கையேடுகள் வாயிலாகவும் தெரிந்து கொண்டு அனைத்து ஆவணங்களுடன் தயாராக இருந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை மட்டும் இல்லாமல் அரசு சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கும் விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
45 நாட்களில் முடிவு: 15ஆம் தேதி தொடங்கப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக யாரெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்கிறார்களோ அவர்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே வரும் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தொடங்கும் முகாம்களை பெண்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
நவம்பர் மாதம் வரை முகாம்: முதல் கட்டமாக ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 112 முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது .அடுத்ததாக ஆகஸ்ட் 15 இல் தொடங்கி செப்டம்பர் 14 வரை இரண்டாவது கட்ட முகாமும், செப்டம்பர் 15 தொடங்கி அக்டோபர் 14 வரை மூன்றாவது கட்ட முகாமும் நடத்தப்பட இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நான்காவது கட்ட முகாம்கள் நடைபெற இருக்கின்றன.
ஜூலையில் விண்ணப்பம் செப்டம்பரில் பணம்: மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்ய விரும்பும் பெண்கள் தங்களுடைய ரேஷன் அட்டை, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். வரும் 15ஆம் தேதி விண்ணப்பம் செய்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் பெண்கள் இந்த முகாம்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications