மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா?

தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் அண்மையில் தான் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்த பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிகள் இருந்தும் விடுபட்டதாக எண்ணக்கூடிய பெண்கள் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் அவர்களின் பெயரும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறியிருக்கிறார் .

மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா?

இதனை அடுத்து கலைஞர் மகளிர் தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் பலரும் மேல்முறையீடு செய்து இருக்கின்றனர். தற்போது அதிகாரிகள் அந்த விண்ணப்பங்கள் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தகுதி இருந்தும் தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதக்கூடிய பெண்கள் தங்களுடைய பகுதிக்கான வட்டாட்சியரை அணுகி மேல்முறையீடு செய்யலாம்.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றால் அதற்கான குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும். அந்த குறுஞ்செய்தியில் எதற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவலும் வந்திருக்கும். எனவே இந்த குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. பெண்கள் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம் அல்லது வட்டாட்சியரை அணுகி மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். குறிப்பிட்ட அந்த குடும்பத்தினரின் வருமானம் இருப்பிடம் ஆகியவற்றை எல்லாம் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று ஆய்வு செய்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் . இந்த கள ஆய்வின் அடிப்படையில் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா மீண்டும் நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் குறுஞ்செய்தி மூலமாகவே தெரிவிக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெறுகிறார்கள். கூடிய விரைவில் மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அரசு தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்குமா இல்லை தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகை உயர்வு அறிவிப்பு வெளியாகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

அரசு இப்போது தான் திட்டத்தை விரிவாக்கம் செய்து மகளிர் உரிமை தொகை பயனாளிகள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. பொங்கல் பரிசு வழங்க வேண்டிய அழுத்தமும் உள்ளது என்பதால் உடனே மகளிர் உரிமை தொகையை உயர்த்தாது என்றே சொல்லப்படுகிறது. எனவே தேர்தல் வாக்குறுதியில் 1500 ரூபாய் என உரிமை தொகையை உயர்த்த வாய்ப்புள்ளது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+