மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்கள்!! செப்.15இல் முக்கிய அறிவிப்பு?

சென்னை: தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் தோறும் 1000 ரூபாயை வழங்கி வருகிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை பெண்களின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வறுமையில் இருக்கக்கூடிய பெரும்பாலான குடும்பத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளின் வரவேற்பு பெற்ற திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது . சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக பெற்று வருகின்றனர். இந்த சூழலில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது.

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்கள்!! செப்.15இல் முக்கிய அறிவிப்பு?

இதனிடையே தமிழ்நாடு அரசு விடுபட்ட பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்தது. கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் திமுக அரசு இந்த முறை விண்ணப்பம் செய்யக்கூடிய பெரும்பாலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கும் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்ற வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத பெண்கள் கூட நவம்பர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும். முன்னதாக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் முடிவு தெரிந்து விடும் என அரசு கூறியிருந்தது.

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்கள்!! செப்.15இல் முக்கிய அறிவிப்பு?

ஜூலை 15ஆம் தேதி வாக்கில் விண்ணப்பம் செய்த பெண்களுக்கு செப்டமர் முதல் வாரமே பதில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரவில்லை. அதேவேளையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெண்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை கண்டறிவதற்கான ஆப்ஷன் என்பது நீக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான பெண்கள் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். விண்ணப்பம் செய்து 45 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட சூழலில் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா கிடைக்காதா ஒருவேளை நிராகப்பட்டிருந்தால் அதற்கு என்ன காரணம், மேல்கொண்டு முறையீடு செய்யலாமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழலில் அதிகாரிகள் ஒருபுறம் இந்த விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு கள ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தான் முதன்முறையாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. எனவே செப்டம்பர் 15ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களில் இருக்கின்றன என்பதால் அன்றைய நாளில் இது தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகலாம் என பெண்கள எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+