சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியுள்ள குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை உரிமை தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை: கலைஞர் மகளிர் உரிமையைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கூடிய வகையில் வரும் 15ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகளின் உரிமையை தொகை பெறுவதற்கு தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறுபவர்கள் , புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜூலை 15 முதல் விண்ணப்பம்: தமிழ்நாடு அரசு சார்பாக 15ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம்கள் வாயிலாக பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம். இந்த முகாம்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் நேற்று முதல் தகவல் கையேடு வழங்கும் பணிகளை தொடங்கி விட்டனர். இதன்படி ஜூலை 15ஆம் தேதியிலிருந்து மகளிர் உரிமை தொகையை விண்ணப்பங்களை பெண்கள் வழங்கலாம் .
45 நாட்களில் பரிசீலனை: இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதி தரப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்துவதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மக்கள் மகளின் உரிமை தொகையை திட்டம் மட்டும் இல்லாமல் அரசு சார்ந்த பல்வேறு சேவைகளையும் இந்த முகாம்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்பதால் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
நவம்பர் வரை முகாம்கள்: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் அனைத்து நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகங்கள் நடத்தப்பட இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன .
நான்கு கட்ட முகாம்கள்: முதல் கட்டமாக ஜூலை 15 தொடங்கி ஆகஸ்ட் 14 வரை 112 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 15இல் தொடங்கி செப்டம்பர் 14 வரை 96 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மூன்றாவது கட்டமாக செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரை 89 முகாம்களும், நான்காவது கட்டமாக அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை 63 முகாம்களும் நடைபெற இருக்கின்றன என அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது .
தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு: இந்த முகாம்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று இது தொடர்பான குறிப்பேடுகளை வழங்கி வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கு காத்திருக்கும் பெண்கள் இந்த தன்னார்வலர்களிடம் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதியில் எந்த நாளில் முகாம் நடைபெறுகிறது என்பதை கேட்டு குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
நவம்பர் 14ஆம் தேதி கடைசி: முகாம் நடைபெறும் அன்று தவறாமல் ஆவணங்களுடன் சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். எனவே மகளிர் உரிமை தொகை வேண்டும் என காத்திருக்கும் பெண்கள் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் இது இரண்டு தேதியையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications