வியாழக்கிழமை வர்த்தகத்தில் மேக்மா பின்கார்ப் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீத வளர்ச்சியை அடைந்து 52 வார உச்சத்தை நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிறுவனத்தின் பூனாவாலா குரூப் இந்த நிதியியல் சேவை நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் மேக்மா பின்கார்ப் பங்குகள் அதிரடியாக 10 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் மேக்மா பின்கார்ப் பங்குகள் 52 வார உச்ச விலையை அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் மேக்மா பின்கார்ப் பங்குகள் இன்று 9.95 சதவீதம் வளர்ச்சி அடைந்து 93.40 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் 9.99 சதவீத உயர்வில் 93.55 ரூபாயை அடைந்துள்ளது.
வங்கி சேவையில் அல்லாத நிதி நிறுவனமான இருக்கும் மேக்மா பின்கார்ப் நிறுவனத்தில் கொரோனா வைரஸ்-க்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் இந்தப் பூனாவாலா குரூப். மருத்துவத் துறையைத் தொடர்ந்து நிதியியல் சேவை துறையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் பூனாவாலா குரூப் மேக்மா பின்கார்ப் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைச் சுமார் 3,456 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
மேக்மா பின்கார்ப் பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் பூனாவாலா குரூப்-ன் நிதி சேவை பிரிவான பூனாவாலா பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும். பூனாவாலா பைனான்ஸ் தற்போது கார்ப்பரேட் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே நிதி சேவை அளித்து வருகிறது.
இந்த 60 சதவீத பங்கு கைப்பற்றலுக்குப் பின் மேக்மா பின்கார்ப் நிறுவனம் மற்றும் இதர கிளை நிறுவனங்களின் பெயர் பூனாவாலா பைனான்ஸ் ஆக மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications