சில நாட்களாக உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்றுவருகிறது.மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவாகும். கோடிக்கணக்கான பக்தர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்தில் கூடும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில், பலருக்கும் வணிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படி ஒரு சாதாரண தேநீர் விற்பனையாளர், தனது புத்திசாலித்தனமான முயற்சியால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ஒரே நாளில் ரூபாய் 5,000 லாபம் சம்பாதித்த இந்த விற்பனையாளரின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகி, பலருக்கும் தொழில்முனைவோராக மாறும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுபம் பிரஜாபத் என்ற இளைஞர்.அவர் ஒரு யூட்யூப் உள்ளடக்க உருவாக்குபவர் (content creator). அவர் மகா கும்பமேளாவில் வியாபாரம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய தேநீர் கடையை அமைத்தார். சுபம் பிரஜாபத் என்ற யூடியூப் உள்ளடக்க உருவாக்குபவர் (content creator), மகா கும்பமேளாவில் வியாபாரம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய தேநீர் கடையை அமைத்தார்.

சுபம் பிரஜாபத் என்ற யூட்யூப் உள்ளடக்க உருவாக்குபர் (content creator), மகா கும்பமேளாவில் வியாபாரம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய தேநீர் கடையை அமைத்தார்.
அவரின் நோக்கம் என்னவென்றால் மிக எளிமையானது தான் ஒரே நாளில் எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும்?"என்பதே, அவர் ஒரு நாளின் முடிவில், ரூபாய் 7,000 மதிப்புள்ள தேநீர் விற்று, ரூபய் 5,000 லாபம் ஈட்டினார்!.அவர் தனது YouTube சேனலில் இந்த அனுபவத்தை பதிவு செய்து, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சுபம் பிரஜாபத் வெற்றிக்கு பின்னணியில் உள்ள ரகசியம்! என்னவென்றால் ,காலை நேரம் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகமாக இருப்பதால், சூடான தேநீருக்கு அதிக தேவை இருந்தது. மக்கள் பயணத்தில் ஒரு தேநீர் குடிக்க விரும்பினர். இதை பயன்படுத்திய அவர், அதிக விற்பனை செய்து லாபம் ஈட்டினார். மதிய நேரத்தில் மக்களிடம் தேநீர் தேவையான அளவிற்கு செல்லவில்லை. விற்பனை மந்தமானது. இதனால் அவர் சிறிது ஓய்வு எடுத்து, மாலைக்கான பெரிய திட்டங்களை தீட்டினார். மாலை நேரம் மக்களும் அதிகம், கூட்டமும் அதிகம்! இதை பயன்படுத்தி, அவர் மேளா வழியாக நேரடியாக சென்று தேநீர் விற்றார். இதனால் அவருடைய விற்பனை இரட்டிப்பாகியது.
அவரது வெற்றியை பார்த்த பலர், "ஒரே நாளில் ரூபய் 5,000 என்றால், ஒரு மாதத்தில் ரூபாய் 1,50,000! இது நம்ப முடியுமா?" என்று ஆச்சரியமடைந்தனர்.சிலர் பல கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்."நமக்கு இப்படிப் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும், நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை!" என்றும் "விற்பனையில் ரூபாய் 7,000, லாபத்தில் ரூபாய் 5,000? நான் படிப்பை விட்டுவிட்டு இதை தொடங்கலாமா?" என்றும் கூரியுள்ளனர்.
மகா கும்பமேளா ஆன்மீகத்திற்காக மட்டுமல்ல, வணிகத்திற்கும் பெரிய வாய்ப்பு. சிறிய முதலீட்டில் பெரிய லாபம் ஈட்டலாம் என்பதற்கான உதாரணமாக, சுபம் பிரஜாபத் இருக்கிறார்.சுபம் பிரஜாபத்தின் வெற்றி, ஒரு சாதாரண யோசனையை பெரிய வெற்றியாக மாற்ற முடியுமென்பதற்கான சிறந்த உதாரணம்.அவரின் முயற்சி பலருக்கும் "நாமும் இதைப் போல் ஒரு வணிகம் தொடங்கலாமா?" என்ற யோசனைக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications