மகா கும்பமேளாவின்போது படகோட்டிகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் இதை உத்தர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் முற்றிலுமாக மறுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், 130 படகுகளை வைத்திருந்த ஒரு படகோட்டியின் குடும்பம் மகா கும்பமேளாவின்போது, வெறும் 45 நாட்களில் மொத்தமாக ரூ.30 கோடி சம்பாதித்ததாக கூறியுள்ளார். அப்படி பார்த்தால் ஒவ்வொரு படகும் 45 நாட்களில் ரூ. 23 லட்சம் வரை வருமானம் பெற்றுத் தந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.52,000 ஆகும்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பா மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்தனர். இதனால், படகு சவாரிக்கு அதிக தேவை ஏற்பட்டது. படகோட்டிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணிசமான வருமானம் ஈட்டினர்.

படகோட்டிகளுக்கு இந்த கும்பமேளாவில் நல்ல வருமானம் கிடைத்தது குறித்து பேசிய முதல்வர், 2025 முதல் 2026-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கியமாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகளின் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. யோகி ஆதித்யநாத் தனது உரையில் 2017-ஆம் ஆண்டு முதல் உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை எடுத்துரைத்தார்.
அதே நேரம் எதிர்க்கட்சிகள் பொதுமக்களை ஏமாற்ற ஓட் பேங்க் பாலிடிக்ஸ்-ஐ பயன்படுத்துவது குறித்தும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். "எங்களுடைய அரசாங்கம் எப்போதும் மக்களின் நலனை குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களின் நலனை முன்னுரிமைப்படுத்தி வருகிறது", என்று முதல்வர் கூறினார்.
2025 முதல் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கானது என்று கூறிய முதல்வர், இதற்கு முன்னர் நடந்த பட்ஜெட்டில் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றும் விளக்கினார். "எங்கள் முதல் பட்ஜெட்டான 2017 முதல் 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இன்று விவசாயிகள் மனநிறைவுடன் உள்ளனர். தற்கொலைகள் பெருவாரியாக குறைந்துவிட்டன.
2018 முதல் 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் முக்கிய முடிவுகளை எடுத்தோம்.
2021 முதல் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலம் தன் நிறைவு பெறுவதற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல 2023 முதல் 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களின் முக்கிய அம்சம் குறித்தும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications