உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த மகா கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களும், துறவிகளும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக உத்தர பிரதேச மாநிலத்தை நோக்கி படையெடுத்தவுடன் இருக்கிறார்கள்.

இந்த மகாகும்பமேளா நிகழ்வுக்காக உத்தர பிரதேச அரசு 6382 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயம் செய்துள்ளது. அதே வேளையில் மகா கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக உத்திர பிரதேச மாநில அரசு மகா கும்பமேளா நடைபெறக்கூடிய ஒன்றரை மாத காலங்களில் தங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறும் என தெரிவித்திருந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகரும் முன்னால் ஐஏஎஸ் அதிகாரியுமான பவானிஷ் அவஸ்தி இந்த தகவலை வெளியிட்டு இருந்தார்.
ஒரு பக்தர் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் எட்டாயிரம் ரூபாய் செலவு செய்கிறார் என வைத்துக் கொண்டால் இங்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிப்பை கொண்டு நாம் கணக்கிடும் போது இது 3.2 லட்சம் கோடி ரூபாய் வரை செல்லக்கூடும் என கூறியுள்ளார்.
மகா கும்பமேளா நிகழ்வுக்கான தலைமை அதிகாரியாக செயல்படக்கூடிய விஜய் ஆனந்த் உத்தர பிரதேச மாநில அரசு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வரி, வாடகை உள்ளிட்டவை மூலம் மட்டும் 25 ஆயிரம் கோடி வருமானமாக ஈட்டும் எனக் கூறியுள்ளார். மகா கும்பமேளா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறக்கூடிய பரிவர்த்தனைகளின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சிறிய வியாபாரிகள், டெம்போ ஆப்ரேட்டர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், பூ விற்பனை செய்பவர்கள் மகா கும்பமேளா நினைவு சின்னங்களை விற்பனை செய்பவர்கள் ஹோட்டல்களை நடத்துபவர்கள் உணவகங்களை நடத்துபவர்கள் இந்த நிகழ்வின் மூலம் பெரிய அளவில் வருமானம் பார்ப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
என்டிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் இந்த நிகழ்வின் மூலம் மட்டும் இந்திய ஜிடிபிக்கு ஒரு சதவீத வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார். அனைத்து இந்திய வணிகர்களுக்கான கூட்டமைப்பு மகா கும்பமேளா நிகழ்ச்சி மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என கூறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications