உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். ஆனால் 2025 மகா கும்பமேளாவில் துறவிகளைத் தவிர, பலர் அதிக விவாதத்திற்கு உட்பட்டு உள்ளனர். ஹர்ஷா ரிச்சாரியா, ஐஐடிஏஎன் பாபாவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர்.
அவர்களை எல்லாம் மீறி மாலை விற்றுக் கொண்டிருந்த மோனாலிசா மிகவும் வைரலானர். இணையதளம் முழுவதும் அவரின் பேச்சாகவே இருந்தது. அவரின் அழகைக் கண்டு அனைவரும் திகைத்தனர். யார் இந்த மோனாலிசா? எனத் தேடத் தொடங்கினர். அவரை பேட்டி எடுக்க போட்டி போட்டுக் கொண்டனர். திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில், காதலி கொடுத்த யோசனையின் மீது நம்பிக்கை வைத்த இளைஞர் ஒருவர் மகா கும்ப மேளாவில் ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்து நெட்டிசன்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுவருகிறார்.
அதாவது, இந்த இளைஞர் முதலீடு எதுவும் இல்லாமல், ஒரு வாரத்தில் 40,000 ரூபாய் சம்பாதித்துதான் இதற்கு காரணம். அவரது காதலியின் யோசனையின் பேரில் அந்த இளைஞர் மகா கும்ப மேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு, பல் துலக்குவதற்காக Neem datun என்ற வேப்பங்குச்சியை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து இளைஞர் கூறுகையில், மகா கும்பமேளாவுக்கு பணம் சம்பாதிப்பதற்காக வந்ததாகவும், இதுவரை ரூ.40,000 சம்பாதித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்த யோசனையை யார் கொடுத்தது என்று கேட்டதற்கு, "என்னுடைய காதலி" என்று முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, சமூக ஊடக பயனர்கள் இளைஞரின் நேர்மையையும், அவரது காதலியின் மீதான அவரது அன்பையும், மேலும் அவருக்கு வெற்றிகளை கொடுத்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். "அத்தகைய அற்புதமான காதலியை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள் அல்லது ஏமாற்றிவிடாதீர்கள்". வாழ்க்கைப் பாதையில் வெற்றியின் உச்சத்தை அடைந்துவிட்டாய்". "ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும், ஒரு வலிமையான பெண் இருக்கிறாள். அவன் தன் காதலிக்கு முழுக் கிரெடிட்டைக் கொடுப்பதையும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது" என்பது போன்று பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications