மனிதர்களின் மனம் எப்போது என்ன முடிவெடுக்கும் என நம்மால் கணிக்கவே முடியாது. ஐஐடி போன்ற ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படித்து அமெரிக்காவில் வேலை என்றால் வாழ்க்கையே செட்டிலாகிவிட்டது என்று தான் நாம் கருதுவோம். ஆனால் அதுவல்ல வாழ்க்கை என கூறி சன்னியாசிகளாகிவிட்ட ஐஐடி பட்டதாரிகளும் இருக்கின்றனர்.
அபய் சிங்: இவர் மசானி கொரக் என அறியப்படுகிறார். இவருக்கு வயது 30. ஐஐடி மும்பையில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் இன்ஜினியரிங் பயின்றவர். தற்போது சன்யாசியாக மாறி இருக்கிறார். ஐஐடியில் படிப்பை முடித்த உடனே இவருக்கு கனடாவில் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவற்றை அனைத்தையும் விட்டுவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் சன்னியாசம் வந்து விட்டார். தற்போது மகா கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் இவர் புகழ்பெற்ற நபராக மாறி இருக்கிறார்.

அவிரல் ஜெயின் : வாரணாசி ஐஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்த இவர் 2019 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பி சன்னியாசியாக மாறிவிட்டார். தற்போது விசுத்த சாகர்ஜி மகாராஜாவின் ஆசிரமத்தில் இவர் சன்னியாசியாக இருக்கிறார்.
சன்கே பரேக்: மும்பை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் படிப்பை முடித்த இவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு சென்று பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் அதில் இவருக்கு திருப்தி கிடைக்கவில்லை. எனவே நாடு திரும்பிய அவர் தற்போது சமண மத துறவியாக மாறி இருக்கிறார்.
ஆச்சார்யா பிரசாந்த் : சமூக வலைத்தளங்களில் இவருடைய வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. இவர் ஐஐடி டெல்லியில் பட்டப்படிப்பை முடித்தார் பின்னர் அகமதாபாத்தில் எம்பிஏ படிப்பை முடித்தார். ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவற்றை விட்டுவிட்டு துறவறம் ஏற்றார். இவர் தற்போது அத்வைதா லைப் எஜுகேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி மக்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து கற்பித்து வருகிறார்.
மகான் எம் ஜி: சுவாமி வித்தியநாத் நந்தா என அறியப்படக்கூடிய இவர் ஐஐடி கான்பூரில் பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணித பிரிவின் பிஹெச்டி முடித்தார். 2008 ஆம் ஆண்டு இவர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். தற்போது கணித பாடத்தை விட்டு விட்டு வாழ்க்கை குறித்து மக்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
கௌரவ் தாஸ்: ஐஐடி மும்பையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னாளில் இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்செஸ் (International Society for Krishna Consciousness (ISKCON)) இஸ்கானில் இணைந்தார்.
சுவாமி முகுந்தாநந்தா: ஐஐடி சென்னையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் எம்பிஏ படிப்பையும் முடித்திருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் பின்னாளில் வேலையை விட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார். இவர் ஜகத்குரு கிரி பாலுஜி யோகா சாஸ்தா என்ற அமைப்பை நிறுவி யோகா மற்றும் தியானம் உள்ளிட்டவற்றை கற்பித்து வருகிறார்.
ரசநாத் தாஸ்: கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த இவர் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்திருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அதில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை என கூறி இஸ்கான் அமைப்பில் இணைந்து தற்போது பலருக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
சந்திப் குமார் பட்: டெல்லி ஐஐடியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர். 2002 ஆம் ஆண்டு கல்லூரியிலேயே கோல்டு மெடல் பெற்றார். பின்னர் எம்டெக் முடித்தவர் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் தன்னுடைய 28 வயதில் குடும்பத்தை துறந்து பணிகளைத் துறந்து சன்னியாசம் ஏற்றார். இதனை தொடர்ந்து தன்னுடைய பெயரை சுவாமி சுந்தர கோபால்தாஸ் என மாற்றிக் கொண்டார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications