சிவபெருமானை வழிபடுவதற்காக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகைகளில் மகா சிவராத்திரியும் ஒன்று. 2025-ஆம் ஆண்டின், பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, தியானம் செய்து, கோவில்களுக்கு சென்று வழிபடுவர். கோவில்களுக்கு சென்று வணங்கி விட்டு, குறிப்பிட்ட சில பொருட்களை ஏழைகளுக்கு வழங்குவது சிவபெருமானையே மகிழ்வித்து, அமைதி ஆரோக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பால் மற்றும் தண்ணீர்: எந்த ஒரு தெய்வ வழிபாடானாலும் அவற்றுக்கு பால் மற்றும் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது நீண்ட காலமாக நம் நாட்டில் இருந்து வரும் வழக்கமாகும். அதேபோலத்தான் சிவபெருமானுக்கும் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்வது மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே அபிஷேகம் செய்து முடித்த பிறகு நீங்கள் ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.
ஏன் தானம் செய்ய வேண்டும்?: மகா சிவராத்திரி அன்று ஏழைகளுக்கு பால் மற்றும் நீர் தானம் செய்வது புண்ணியத்தை கொண்டுவரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை போலவே பிறருக்கு தானம் செய்வது ஒருவரின் கர்மாவை நீக்கி, பாவங்களைப் போக்கும். இதனால் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.
வில்வ இலை மற்றும் பழங்கள்: வில்வ மரம் இந்து மதத்தில் ஒரு முக்கியமான மரமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவ வழிபாட்டில் வில்வ இலைகள் மற்றும் பழங்களுக்கு தனித்துவமான இடம் உண்டு. நீங்கள் சிவன் கோவில்களுக்கு சென்றிருந்தால் அங்கு வில்வ இலைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்.
ஏன் தானம் செய்ய வேண்டும்?: சிவராத்திரி அன்று வில்வ இலைகளையும் பழங்களையும் தானம் செய்வது சிவபெருமானின் பூரண ஆசீர்வாதத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு வில்வம் மரக்கன்றுகளையும் ஏழைகளுக்கு வழங்கலாம். பழங்களை வழங்குவது உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதோடு சிவபெருமானின் அருளைப் பெறவும் உதவும்.
வெள்ளை நிற ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்: வெள்ளை நிறம் தூய்மை மற்றும் அமைதியை குறிக்கிறது. இது முக்கியமாக சிவபெருமானின் குணங்கள் என்றே சொல்லலாம். எனவே வெள்ளை ஆடைகள், போர்வைகள் அல்லது துண்டுகள் போன்ற பொருட்களை ஏழைகளுக்கு தானம் செய்வது தெய்வத்தை வசீகரிக்கும் ஒரு சிறந்த வழியாகும்.
ஏன் தானம் செய்ய வேண்டும்?: சிவராத்திரி அன்று, ஏழைகளுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாக கருதப்படுகிறது. வறுமையில் வாடும் மக்களுக்கு ஆடை வழங்குவது, அவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சிவபெருமானை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தானம், நல்ல கர்மா மற்றும் சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும்.
உணவு மற்றும் தானியங்கள்: உணவு மற்றும் தானியங்களை தானம் செய்வது இந்து மதத்தில் மிகவும் புனிதமான செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் உன்னத செயல்களில் ஒன்று. "அன்னதானம்" என்று அழைக்கப்படும் இந்த தானத்தினை சிவராத்திரி அன்று செய்வது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஏன் தானம் செய்ய வேண்டும்?: சிவராத்திரி அன்று விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு உணவு தானம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். தானம் செய்யப்படும் உணவில் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற தானியங்கள் இருப்பது இன்னும் விசேஷமாகும். இதனால் அன்னதானம் செய்பவர்களுக்கு உணவு பஞ்சம் நீங்கி எப்போதும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்த தானம் புண்ணியத்தை பெற்றுத்தர உதவுகிறது.

அதோடு நீங்கள் தானம் செய்யும் போது உங்களுடைய எண்ணத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த வித சுயநல நோக்கமும் இல்லாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தானம் செய்யுங்கள். அப்படி செய்யப்படும் தானங்கள் சிவபெருமானை மகிழ்வித்து அவரது பூரண ஆசீர்வாதத்தை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை. இந்த புனித நாளில் அனைவருக்கும் அன்பை வழங்குவோம். ஓம் நமசிவாய!
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications