12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடைபெறக்கூடிய ஆன்மீக ஒன்றுகூடல் தான் இந்த மகா கும்பமேளா. இது உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூடலாகும். இதற்காக உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புனித நீராடுவர். 3 புனித நதிகள் ஒன்று கூடும் இடத்தில் நீராடுவது பாக்கியம் மற்றும் இதனால் பாவங்கள் தீர்ந்து மோட்சம் உண்டாகும் என்பது ஆண்டாண்டாக உள்ள நம்பிக்கை.
இந்த மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. 2025-ஆம் ஆண்டின் கும்பமேளாவின் போது ரூ. 2 லட்சம் கோடி வருவாய், பல வணிகர்களால் ஈட்டப்படும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் சுமார் 450 மில்லியன் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள சுற்றுலா மையங்கள், ஹோட்டல்கள் போன்ற பல்வேறு வணிகர்கள் பெருமளவில் பயனடைய உள்ளனர். ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் பயணத்தின் போது ரூ.5000 செலவிட்டாலே கும்பமேளாவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டை எளிதில் எட்டிவிடலாம். மேலும் இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஹோட்டல், தங்கும் விடுதிகள் மூலம் 40,000 கோடி வருவாய் ஈட்டப்படும் என்றும் CIAT மதிப்பிட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ. 7,500 கோடி செலவிட்டுள்ளது. அதோட ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.3.5 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு தினமும் 7,000 பக்தர்கள் தங்கள் பயணத்திற்காக ரூ.5,000 செலவு செய்தாலே இந்த மதிப்பீட்டை அடைந்துவிட முடியும்.
உணவு மற்றும் பானங்கள் விற்பனையின் மூலம் ரூ.20,000 கோடி கிடைக்கும் என்றும் CIAT மதிப்பிட்டுள்ளது. மற்றொரு முக்கிய வருவாய் ஆதாரமாக பிரசாதங்கள், தூபக் குச்சிகள், விளக்குகள், சிலைகள் போன்ற பொருட்களில் மூலம் ரூ.20,000 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி பிராண்டுகளும் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த ஸ்டால்களை அமைத்துள்ளன. சில பிராண்டுகள் மாதிரிகளையும் வழங்கி தங்கள் பொருட்களை மார்க்கெட்டிங் செய்கின்றனர். ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் கும்பமேளாவில் தங்களின் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள புதுமையான வழிகளை கண்டுபிடித்துள்ளன. ஸ்டிங் மற்றும் மவுண்டன் டியூ போன்ற பானங்களை வைத்திருக்கும் பெப்சிகோ 30 அடி உயர ஒளிரும் பாட்டிலை நிறுவியுள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய பிராண்டுகள் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications