ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது.. பறந்தது கோரிக்கை..!!

மும்பை: இந்தியாவின் அடையாளமாகவும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் தலைவராகவும் திகழ்ந்து வந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் அவதியுற்ற ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது.. பறந்தது கோரிக்கை..!!

ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவரது உயிர் பிரிந்தது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் ரத்தன் டாடாவின் மறைவை ஏற்க முடியாமல் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவினை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் முழு அரசு மரியாதையோடு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ரத்தன் டாடாவுக்கு 2000 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2008ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கிய மத்திய அரசு கௌரவித்துள்ளது. இதில் பத்ம விபூஷன் விருது நாட்டின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படுகிறது.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரி மகாராஷ்டிரா அமைச்சரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் பல புதிய தொழில்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா என குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போதும் நாட்டின் மீது அன்பும் நேர்மையான உணர்வுகளும் கொண்டு, நாட்டிற்கும் சமூகத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம் என தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில் துறையிலும் சமுதாய மேம்பாட்டிலும் ரத்தன் டாடாவின் பங்கு ஈடு இணையற்றது என அந்த தீர்மானக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நேரத்திலும் ஒழுக்கத்தையும் நேர்மையும் இழக்காமல் தொழில் செய்தவர் ரத்தன் டாட்டா என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

உலக அரங்கில் டாடா குழுமத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு முக்கியமான இடத்தை உருவாக்கியவர் ரத்தன் டாடா என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரத்தம் டாடா எடுத்த நடவடிக்கைகளும் ,கொரோனா தொற்று காலத்தில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரத்தன் டாடா 1500 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததும் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+