இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு முக்கியமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
100 நாள் திட்டமாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய வாகனங்களை வாங்குவோர், சொந்தமாக பார்க்கிங் இடம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே புதிய கார் வாங்க அனுமதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

யார் வாங்கினாலும் அரசு அதிகாரிகள் வந்து வீட்டில் பார்க்கிங் இடம் உள்ளது என்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும், இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்க முடியும். அதாவது புதிய கார் வாங்கும் போது இந்த சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இது இல்லையென்றால் கார் வாங்க முடியாது என்ற புதிய சோதனை திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முயற்சி, மும்பை, நாக்பூர், புனே நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மோசமடைந்ததிற்கு மத்தியில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, கார் வாங்க திட்டமிடுவோர் BMC வழங்கும் "சர்டிபைடு பார்க்கிங் ஏரியா" (CPA) சான்றிதழைப் பெற்று, மாநில போக்குவரத்துத் துறையால் சரிபார்க்க வேண்டும்.
இந்த சான்றிதழ், வாகன வாங்குவோருக்கு பப்ளிக் அல்லது பிரைவேட் பார்க்கிங் வசதிகளில் தனியாக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடம் இருப்பதற்கான ஆதாரமாக செயல்படும். டிசம்பர் 30 அன்று போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் முதல்வரிடம் முன்வைத்த அறிக்கையில் இந்த பரிந்துரை இருந்தது.
இந்த விதிமுறைகளை அமல்படுத்தும் முன், கிடைக்கக்கூடிய பப்ளிக் அல்லது பிரைவேட் பார்க்கிங் இடங்களின் விரிவான மதிப்பீட்டை அரசு மேற்கொள்ளும். இந்த செயல்முறையில் கூட்டுறவு வீட்டு வசதிகள், வீட்டுவசதி அமைச்சகங்கள், பொதுப்பணித் துறை (PWD), நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரிகள், சிவில் அமைப்புகள், போக்குவரத்து நிபுணர்கள், மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (MMRDA) மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படுவார்கள்.
லண்டன், டோக்கியோ, நியூயார்க், சூரிச் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகின் பிற முக்கிய நகரங்களில் இதே திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உல்ளது. இந்த மாடலை அடிப்படையாகவே இந்த பார்க்கிங் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications