மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவருமான அஜித் பவார் பயணித்த சார்ட்டர் விமானம் புதன்கிழமை (ஜனவரி 28) காலை பாராமதி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
மும்பையிலிருந்து பாராமதிக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராமதியில் நடைபெறும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜக-வின் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.
அஜித் பவார் பயணித்த Learjet 45 விமானம் (பதிவு எண் VT-SSK) புதன்கிழமை (ஜனவரி 28, 2026) காலை பராமதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முயற்சி செய்யப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானத்தில் அஜித் பவார் உட்பட 5 பேர் பயணித்தனர். இதில் விமானிகள் இருவர், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் அடங்குவர். விபத்தின் போது விமானம் ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்து வெடித்தது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விமானத்தில் இருந்த அனைத்து 5 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து எப்படி நடந்தது..?
விபத்து குறித்து ஆரம்ப தகவல்கள் தெரிவிப்பதாவது, விமானம் தரையிறங்க முயன்றபோது ரன்வேயின் ஓரத்தில் சென்று விபத்துக்குள்ளானது. தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து துறை குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தின் காரணம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகன் பார்த் பவார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பாராமதிக்கு அவசரமாக சென்றுள்ளனர். சுப்ரியா சுலே உள்ளிட்ட என்சிபி தலைவர்களும் சம்பவ இடத்தை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர். அவரது திடீர் மறைவு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தை கண்டு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் மகாராஷ்டிரா அரசின் உள்கட்டமைப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் அஜித் பவார் கலந்துகொண்டிருந்தார். முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப் பிறகே அவர் பாராமதிக்கு புறப்பட்டிருந்தார்.
அஜித் பவார் தற்போது மகாராஷ்டிராவில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ளார். என்சிபி கட்சியின் முக்கிய தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வரும் அவர், ஜில்லா பரிஷத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications