இந்தியாவின் நிதியியல் தலைநகரம் என அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் மும்பை அதிக மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மும்பைக்கு வேலை தேடி வருகின்றனர்.
இதனால் இடநெருக்கடி, சுகாதார பிரச்சினை போன்றவற்றையும் அந்த நகரம் சந்தித்து வருகிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு சிறந்த வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், மூன்றாவது மும்பை என்ற புதிய நகரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவை அம்மாநில பா.ஜ.க. கூட்டணி அரசு இறுதி செய்துள்ளது.

அது என்ன 3வது மும்பை, அப்ப 2வது மும்பை எது என்ற கேள்வி உங்களுக்குள் எழுமே. 1972ல் மும்பையின் புறநகர் பகுதியில் உருவாக்கப்பட்ட நகர்புற நகரமான நவி மும்பையை தான் 2வது மும்பை என்று அழைக்கப்படுகிறது.
தற்போது உருவாக உள்ள 3வது மும்பை, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கட்டப்படப்பட உள்ளது. சுமார் 323 கி.மீட்டர் பரப்பளவில் 3வது மும்பை நகரம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் புதிய நகரம் மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (எம்.டி.எச்.எல்.) என்று அழைக்கப்படும் பாலம் மூலம் மும்பையுடன் இணைக்கப்படும்.
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பை பெருநகர பகுதி மேம்பாட்டு ஆணையம், மும்பை பெருநகரின் எல்லைகளை மறுவடிவமைப்பதற்கான உத்தரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நகரை உருவாக்குவதற்காக புதிய நகர மேம்பாட்டு ஆணையம் (என்.டி.டி.ஏ.) உருவாக்கப்பட்டது. உல்வே, பென், பன்வெல், உரான்,கர்ஜத் மற்றும் 323 சதுர கி.மீட்டர் பரப்பளவை சுற்றியுள்ள பகுதிகள் புதிய நகரின் ஒரு பகுதியாக இருக்கும். நவி மும்பை விமான நிலைய அறிவிக்கப்பட்ட பகுதியின் கீழ் வரும் 80-90 கிராமங்கள் உள்பட சுமார் 200 கிராமங்கள் என்.டி.டி.ஏ.-ன் பகுதியாக இருக்கும். நாங்கள் இதை மூன்றாவது மும்பை என்று அழைக்கப்படுகிறது.
நன்கு வளர்ந்த நகரத்துக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்டிருக்கும். ஆடம்பர மற்றும் மலிவு விலை குடியிருப்புகள், வணிக வளாகங்கள், டேட்டா மையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான மையங்கள், நிதி நிறுவனங்கள் முதல் பெரிய அறிவு பூங்காக்கள் வரை மூன்றவாது மும்பை நகரம் கொண்டிருக்கும். ஒரு வலுவான போக்குவரத்தும் அங்கு உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
மும்பை பெருநகர பகுதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டின் திட்ட குழுவான நிதி ஆயோக்கும் இணைந்து, 2030ம் ஆண்டுக்குள் மும்பையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தற்போதைய 14,000 கோடி டாலரில் இருந்து 30,000 கோடி டாலராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதில் மும்மொழியப்பட்ட மூன்றாவது மும்பை ஒரு முக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications