ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு மாநில அரசுக்கு அதிகப்படியான வரி வருமானம் கிடைக்கும் ஒரு சில பொருட்களில் மதுபானம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒருபக்கம் அரசு மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது என மக்கள் கோரிக்கை வைத்து வந்தாலும் மறுபுறம் மதுபான விற்பனையில் கிடைக்கும் மிகப்பெரிய வரி வருமானத்தை மாநில அரசுகளால் இழக்க முடியாமலும், அதைப் பிற வழி வர்த்தகத்தில் ஈடு செய்ய முடியாத நிலையில் இருக்கும் காரணத்தால் தொடர்ந்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர அரசு
இந்நிலையில் மகாராஷ்டிர அரசு மதுபான விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் மீதான சிறப்பு வரியை 50 சதவீதம் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கலால் வரித் துறை மதுபானத்திற்கான புதிய விலை பட்டியலை வெளியிட்டு உள்ளது.
மதுபானம் சிறப்பு வரி
மகாராஷ்டிரா அரது மதுபானம் மீதான சிறப்பு வரியை 300 சதவீதத்தில் இருந்து பாதியாகக் குறைத்து 150 சதவீத வரியை மட்டுமே விதித்தாலும், தொடர்ந்து இந்தியாவில் மதுபானத்திற்கு அதிக வரி விதிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் தான் உள்ளது, மகாராஷ்டிரா-வை தொடர்ந்து கேரளா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரிக் குறைப்பு
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வரிக் குறைப்பு விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா ஆகியவற்றுக்கு மட்டுமே பீர் மற்றும் வைன்-க்கு இது பொருந்தாது. மேலும் இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானத்திற்கு மட்டுமே என்பதால் இதன் மூலம் லாபம் அடைவது குறைந்த சதவீத மக்கள் மட்டுமே.
கடத்தல்
இந்த வரிக் குறைப்பு மூலம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு மறைமுகமாகக் கடத்தப்படும் மதுபானத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் மகாராஷ்டிராவில் பிற மாநிலங்களுக்கு இணையாக விலை அளவுகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இப்புதிய வரிக் குறைப்பு டிசம்பர் 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வருவாய்
மகாராஷ்டிராவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபான விற்பனை மூலம் 2016-17 முதல் 2018-19 வரையில் தலா 200 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டில் இப்பிரிவில் கிடைக்கும் வருமானம் 100 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது விற்பனை வரியில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலி.
புதிய விலை பட்டியல்
ஜானி வாக்கர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி விலை 5,760 ரூபாயில் இருந்து 3,750 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஜானி வாக்கர் ரெட் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி 3,060 ரூபாயில் இருந்து 1,950 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஜே&பி ஸ்காட்ச் விஸ்கி விலை 3,060 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஜேம்சன் டிரிபிள் டிஸ்டில்டு ஐரிஷ் விஸ்கி 3,800 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications