மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..?

இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு அனைத்து ப்ரீமியம் தொகையையும் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

நிதி சுமை

நிதி சுமை

பொதுவாக இந்த ப்ரீமியம் தொகை கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசுக்குச் செலுத்தும், ஆனாலும் இந்த நிதிச் சுமை வீடு வாங்குவோர் மீது தான் விதிக்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு ப்ரீமியம் தொகையில் 50 சதவீதத்தைக் குறைப்பதன் மூலம் வீடுகளின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.

 

மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா அரசு

மேலும் இந்தச் சலுகை டிசம்பர் 31, 2021 வரையில் நடைமுறையில் இருக்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இம்மாநில ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு

ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு

2020ல் கொரோனா தொற்றும் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு விழாக் காலச் சலுகைகள் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடுபிடித்தது. ஆனால் அடுத்த மாதமே மீண்டும் சரிவைச் சந்தித்தது.

மத்திய அரசு, ரிசர்வ வங்கி

மத்திய அரசு, ரிசர்வ வங்கி

மத்திய அரசும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் இத்துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல வளர்ச்சி திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதேபோல் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பின் வாயிலாகத் தற்போது 15 வருடக் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது.

22 பிரிவில் ப்ரீமியம்

22 பிரிவில் ப்ரீமியம்

இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் ரியல் எஸ்டேட் துறைகள் அதிகத் தொகையைக் கட்டுமான நிறுவனங்கள் சுமார் 22 பிரிவில் ப்ரீமியம் செலுத்துகிறது. இந்தத் தொகை 50 சதவீதமாகக் குறைக்கப்படும் போது கண்டிப்பாக ரியல் எஸ்டேட் விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை ஊக்குவிக்க இதுபோன்ற அறிவிப்புகள் வருமா.?

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+