இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் மகாராஷ்டிர அரசு.. மாதம் பொறந்தா கையில் காசு..!!!

மகாராஷ்டிரா அரசு 'லாட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, அம்மாநில படித்த ஆண்களுக்காக 'லாட்லா பாய் யோஜனா' என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று வெளியிட்டார். இந்த புதிய திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவிலான நிதியுதவி கிடைத்துள்ளது.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆஷாதி ஏகாதேசியை முன்னிட்டு பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலுக்குச் சென்றார். இங்கு மகாபூஜை முடிந்ததும், Ladla Bhai Yojana என்னும் புதிய திட்டம் குறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற முக்கிய பொருளாதார மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் வேளையில் இந்த பிரச்சனையைச் சரி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் மகாராஷ்டிர அரசு.. மாதம் பொறந்தா கையில் காசு..!!!

Ladla Bhai Yojana திட்டத்தின் கீழ், இளைஞர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்வேறு நிதிச் சலுகைகள் வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு மாதம் ரூ.8,000, பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 அரசிடம் இருந்து நிதியுதவி வழங்குகிறது.

Ladla Bhai Yojana திட்டத்தின் கீழ், இளைஞர்கள் ஒரு தொழிற்சாலையில் ஓராண்டு பயிற்சி பெறுவார்கள், அந்த அனுபவத்தின் அடிப்படையில் வெளியில் பிற வேலைகளை பெற கூடிய அளவுக்கு அனுபவத்தைப் பெறுவார்கள். இந்த முயற்சியின் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் திறமையான பணியாளர்களைத் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று முதல்வர் ஷிண்டே கூறினார்.

இந்தத் திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி மகாராஷ்டிர மாநிலத் தொழில்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கும் அனுப்பும் வழியை உருவாக்கியுள்ளது. இளைஞர்கள் தங்கள் வேலைகளில் போதுமான அனுபவத்தைப் பெற வாய்ப்பு கொடுத்து அவர்களின் தொழிற்பயிற்சி காலத்தில் அரசு அவர்களுக்கு ஊதியம் வழங்கும் என்று ஷிண்டே விளக்கினார்.

மஹாராஷ்டிரா சட்டசபையின் சமீபத்திய கூட்டத்தொடரில் லட்லி பெஹ்னா யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டமன்ற கூட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில் திருமணமான, விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் 21-60 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் வயது வரம்பு 65 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+