மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் DADA அதாவது அண்ணா என அன்போடு அழைக்கப்பட்டவர் தான் அஜித் பவார். அரசியல் குடும்ப வாரிசாக இருந்து தன்னை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொண்ட மகாராஷ்டிர மக்களால் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக திகழ்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் இவருடைய பங்கு என்பது அளப்பரியது.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் , பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். நாட்டின் பழுத்த அரசியல் தலைவரான சரத் பவாரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவர் அஜித் பவர். சரத் பவாரின் அண்ணன் அனந்த்ரா பவாரின் மகன் தான் அஜித் பவார். 1959 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் ஆண்டு பிறந்தவர். 1982 ஆம் ஆண்டிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார்.

இவரின் அரசியல் வாழ்க்கை ஒரு கூட்டுறவு சங்கத்தில் இருந்து தான் தொடங்கியது. 1982 ஆம் ஆண்டு உள்ளூர் சர்க்கரை ஆலையின் கூட்டுறவு சங்கத்தில் முதன்முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் ஊரக பகுதிகளில் இந்த கூட்டுறவு சங்கங்கள் தான் மிக முக்கியமான அமைப்புகளாக திகழ்ந்து வந்தன. அந்த வகையில் சிறுவயதிலேயே எளிய மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கான ஒரு பிரதிநிதியாக செயல்பட்டார்.
பின்னர் புனே மாவட்டத்தின் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக 16 ஆண்டு காலம் செயல்பட்டார். இதுதான் அவர் அரசியலில் நுழைவதற்கு மிக முக்கிய அடித்தளமாக அமைந்தது. 1991 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த அவர் முதல்முறையாக தேர்தல் அரசியலில் களம் இறங்கினார். பாராமதி நாடாளுமன்ற தொகுதியில் எம்பி பதவிக்காக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனை அடுத்து அதே ஆண்டு எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்ட அவர் 1991 தொடங்கி தற்போது வரையிலான அனைத்து தேர்தல்களிலும் பாராமதி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று அசைக்க முடியாத ஒரு தலைவராக திகழ்ந்தார்.
VIDEO | Baramati: An aircraft carrying Maharashtra Deputy Chief Minister Ajit Pawar crashes in Pune district. Visuals from the spot. pic.twitter.com/V5zyO6quT1
— Press Trust of India (@PTI_News) January 28, 2026
பாராமதி தொகுதியில் பல்வேறு முதலீடுகளைக் கொண்டு வந்தது, நீர் பாசன திட்டங்களை கொண்டு வந்தது, கல்வி மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். அந்த வகையில் பாராமதி தொகுதி மக்கள் என்றென்றும் இவருக்கு கடமைப்பட்டிருக்கின்றனர். மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து சரியான முறையில் மாநில பட்ஜெட்டை திட்டமிட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இது தவிர கட்சியிலும் ஒரு சிறந்த வியூக வகுப்பாளராக பொறுப்பு வகித்தார். மகாராஷ்டிரா மாநில அரசியலில் அசைக்க முடியாத ஒரு கிங் மேக்கராக தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தான் அஜித் பவர். பாஜக கூட்டணி கூட்டணி , காங்கிரஸ் கூட்டணி என அனைத்து கூட்டணிகளிலும் அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆக இருந்தவர். மகாராஷ்டிராவில் ஆட்சி மாறும், கூட்டணிகள் மாறும் ஆனால் அஜித் பவார் மட்டும் அந்த துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததே இல்லை. கடைசிவரை துணை முதல்வராகவே இருந்துவிட்டார்.
நாட்டின் பழுத்த அரசியல்வாதியான சரத் பவாரிடம் அரசியல் கற்றுக் கொண்ட இவர் பின்னாளில் சரத் பவாரின் நிழலில் இருந்து வெளியே வந்து தனித்து நின்று மகாராஷ்டிரா அரசியலில் முக்கியமான நபராக உருவெடுத்தார். மகாராஷ்டிராவில் சரியான அரசியல் கணக்கு போடுவதில் வல்லவர். அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் மகாராஷ்ட்ரா அரசுக்கும் , அரசியலுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications