தமிழகத்தில் வசிக்கும் இல்லத்தரசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம்தோறும் 1,000 ரூபாய் தொகையை "மகளிர் உரிமைத்தொகை" என்ற திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய திட்டத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாக அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போன்ற மகளிர் உதவித் தொகை திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களின் அரசும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதன்முதலாக இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது தோராயமாக 1 கோடி பேர் மட்டுமே உதவித் தோகை பெறுபவர்களாக இருந்தனர். அதன் பின் மீண்டும் சிலர் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மூலமாக இணைக்கப்பட்டனர். பிறகு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு தற்போது விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கு தேவையானவற்றை தாமாகவே செய்து கொள்ளும் அளவிற்கு பெண்களை முன்னிருத்துவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம்.
தமிழ்நாடு அரசை பின்பற்றி பல மாநிலங்களிலும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் வழங்கப்பட உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் 1000 ரூபாய்க்கு பதிலாக 1500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
ரக்சா பந்தனுக்கு முன்னதாக நிதி உதவி வழங்கும் முயற்சியில், மகாராஷ்டிரா அரசு "முக்யமந்திரி லட்கி பஹின்" என்ற திட்டத்தை ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்றே தொடங்கவுள்ளதாக மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், அம்மாநிலத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதத்திற்கு ரூ.1,500 நிதியுதவியாகப் பெற உள்ளனர்.
இந்தத் திட்டம் பலதரப்பட்ட பெண்களை, குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் போலவே, மகாராஷ்டிராவின் இந்த திட்டமும் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் பயனாளிகளின் தகுதி வேறுபடலாம்.


Click it and Unblock the Notifications