மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மார்ச் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். விடுமுறை நாட்களை மாநில அரசுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானிக்கின்றன. மார்ச் 2024 இல், மாநிலங்கள் முழுவதும் உள்ள வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் காட்டுகிறது.
இந்த மாதத்தில் வங்கியின் பாதிநாட்கள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகம், தொழில், தனித் தேவைகளுக்கு ஏற்றபடி பண இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். காசோலை வழங்குவோர் அதற்கேற்ப திட்டமிட்டு வழங்க வேண்டும்.

வங்கி விடுமுறை: வங்கித் தவணைகள் செலுத்துவோர் குறிப்பிட்ட தேதிகளுக்கு முன்பே தங்களது அக்கவுண்ட்டில் பணம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் உபரி பணத்தை அக்கவுண்டில் போட்டு வைக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
வாடிக்கையாளர்களே உஷார்!: மார்ச் மாதத்தில், பல மாநிலங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி விடுமுறை இரண்டு முறை வருகிறது. இரண்டு நீண்ட விடுமுறை வார இறுதி நாட்கள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
மார்ச் 2024 வங்கி விடுமுறை: மார்ச் 2024ல் சாப்சார் குட், /சிவராத்திரி, பீகார் திவாஸ், ஹோலி (இரண்டாம் நாள்) - துலேட்டி/டோல் ஜாத்ரா/துலாண்டி, யாசாங் 2வது நாள்/ஹோலி, ஹோலி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும்.
மகாசிவராத்திரி வங்கி விடுமுறை: மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 வெள்ளியன்று வங்கிகள் மூடப்படும், அதைத் தொடர்ந்து இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு.
சிவராத்திரி: எந்த மாநில வங்கிகள் மூன்று நாட்கள் மூடப்படும்: குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, சண்டீகர், உத்தராகண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு - ஸ்ரீநகர், கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம்.
மார்ச் மாதத்தில் மற்ற வங்கி விடுமுறைகள்:
மார்ச் 26 (செவ்வாய்): யாசாங் 2வது நாள்/ஹோலி- ஒரிசா, மணிப்பூர் மற்றும் பீகாரில் வங்கிகள் மூடப்பட்டும்.
மார்ச் 27 (புதன்கிழமை): ஹோலி- பீகாரில் வங்கிகள் மூடப்பட்டும்.
மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) - திரிபுரா, அசாம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
Story Written By: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications