மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) என்னும் திட்டத்தினை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு வழங்கி வருகிறது. பெண்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம் தான் இந்த மகளா சம்மான் சேமிப்பு சான்றிதழ். இந்த திட்டத்தில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வதன் மூலம் வட்டி வருமானத்தை பெற முடியும். பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது MSSC திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்தியேகத் திட்டமாகும். ஒரு பெண் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ. 2 லட்சம். இது அதிகபட்ச வரம்பு மட்டுமே.

குறைந்தபட்ச தொகையையும் முதலீடு செய்யலாம். ஆனால் பிக்சட் டெபாசிட்களைப் போல மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். ரெக்கரிங் டெபாசிட்களை போல மாத மாதம் முதலீடு செய்ய முடியாது. இந்தத் திட்டத்தில் இணையும் ஒருவர் அதிகபட்ச தொகையான ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் தற்போது வழங்கப்படும் 7.5% வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 2 ஆண்டுகள் கழித்து 32,044 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் முதிர்வு தொகை 2,32,044 ரூபாயாக இருக்கும். அதோடு இந்த திட்டத்தில் இணைந்த ஒருவர் முதல் வருடம் முடிந்த பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகையில் 40 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். இந்த திட்டத்தின் லாக்கின் காலம் 2 ஆண்டுகள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு: இந்தத் திட்டத்தில் இணையும் பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கைத் தொடங்க முடியும். ஆனால் 2-வது கணக்கை முதல் கணக்கு தொடங்கப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகுதான் திறக்க வேண்டும்.
குறைந்தபட்ச முதலீடு: முன்பு கூறியது போல் குறைந்தபட்ச தொகையையும் முதலீடு செய்யலாம். குறைந்தது 1,000 ரூபாயில் தொடங்கி 100-இன் மடங்குகளில் ரூ.2 லட்சம் வரையில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அவசர நிலை ஏற்பட்டால் அல்லது கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால் கணக்கை முன்கூட்டியே மூடும் வசதியும் உள்ளது. ஏதேனும் காரணத்திற்காக கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டால் 7.5 சதவீத வட்டிக்கு பதிலாக 5.5% வட்டி வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
MSSC முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. இருப்பினும், ஈட்டப்படும் வட்டி வரிக்கு உட்பட்டது,
எப்படி விண்ணப்பிப்பது?: பெண்கள் தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகக் கிளைக்குச் சென்று MSSC திட்டத்திற்கு முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications