இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திர வைத்திருந்த தென்கொரியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான SsangYong Motor-ன் வர்த்தகம் மற்றும் நிர்வாக உரிமையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. தொடர் நஷ்டத்தில் இயங்கும் தென் கொரிய நிறுவனத்தில் இனியும் முதலீடு செய்து வர்த்தகத்தைக் காப்பாற்ற விருப்பம் இல்லை என மஹிந்திரா நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் SsangYong Motor நிறுவனத்தோடு பிற வெளிநாட்டு வர்த்தக உரிமைகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளைத் தற்போதைய சூழ்நிலைக்கு மறுஆய்வு செய்யப்பட்டு, முதலீடுகளை எதிர்கால வளர்ச்சிக்குச் சேமிக்க முடிவு செய்துள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திராவின் இந்த முடிவால் மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 3,577.64 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
SsangYong Motor
மார்ச் காலாண்டில் மஹிந்திரா & மஹிந்திரா, SsangYong Motor உரிமையை விட்டுக்கொடுத்ததன் மூலம் 2780.47 கோடி ரூபாயை Exceptional items ஆக அறிவித்துள்ளது.
மஹிந்திரா இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 75 சதவீத பங்குகளை வைத்துள்ளது, மேலும் இந்நிறுவனத்திற்குப் புதிய முதலீட்டாளர்கள் வந்தால் இந்தப் பங்குகளை விற்பனை செய்துவிட்டு இதுவரை செய்த முதலீட்டைக் காப்பாற்ற முடிவு செய்துள்ளது மஹிந்திரா.
லாபம்
வரிக்கு முந்தைய லாப அளவீட்டில் இந்நிறுவனம் சுமார் 323 கோடி ரூபாயை பெற்றுள்ளது. அதிக நஷ்டம் தரும் முதலீடுகளைக் கைவிடுவதாலும் வரிக்கு முந்தைய லாபம் 323 கோடி ரூபாய் இருக்கும் காரணத்தாலும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் 7.57 சதவீதம் வரையில் உயர்ந்து 510.45 ரூபாய்க்கு வர்த்தகமாகி முடிந்தது.
வருவாய்
கடந்த மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் இந்த வருடம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் சுமார் 35 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 9,005 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் இக்காலாண்டில் மஹிந்திரா & மஹிந்திரா தனது பங்கு இருப்பை 39.1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதியுள்ளது. இக்காலாண்டில் மட்டும் பங்கு இருப்பு அளவு 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நஷ்டம்
இந்நிலையில் SsangYong Motor உரிமையை விட்டுக்கொடுத்ததன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு மூலம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் லாபத்திற்கு மாறாக நஷ்டம் அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 849 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில், தற்போது 2,502 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications