சென்னை: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சந்தை மதிப்பில் டாடா மோட்டார்ஸ் உடன் போட்டிப்போட்டு வரும் வேளையில், மஹிந்திரா தனது பிரபலமான SUV மாடல்களான போலிரோ மற்றும் ஸ்கார்பியோ ஆகியவற்றின் எலக்ட்ரிக் எடிசன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய எலக்ட்ரிக் SUV களுக்கு ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e என்று பெயரிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஏழு புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவது மஹிந்திரா நிறுவனத்தின் முக்கிய திட்டமாக உள்ளது.

இந்த அறிவிப்பை மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ஆட்டோ மற்றும் பண்ணை துறை தலைமை செயல் அதிகாரியுமான ராஜேஷ் ஜெஜூரிக்கார் முதலீட்டாளர் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
ராஜேஷ் ஜெஜூரிக்கார் பேசுகையில் "அனைத்து ICE இன்ஜின் கொண்ட வாகனங்களும் காலப்போக்கில் எலக்ட்ரிக்மயமாக்கப்படும்" கூறினார். மஹிந்திராவின புதிய எலக்ட்ரிக் மாடல்கள் பிரிவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட XUV.e மற்றும் Thar.e போன்ற எலக்ட்ரிக் வாகனங்களைப் போல, அனைத்து பெட்ரோல் மாடல்களின் பெயருக்கு பின்னால் '.e' என்பதை இணைத்து எலக்ட்ரிக் கார்களுக்கு பெயரிடப்படும்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிற எலக்ட்ரிக் வாகனங்களைப் போலவே, ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e ஆகியவையும் தங்கள் பேட்டரி மற்றும் மோட்டார்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
Thar.e கான்செப்ட் மாடலில் 109hp பவர் மற்றும் 135Nm டார்க் திறன் கொண்ட முன் மோட்டார் மற்றும் 286hp பவர் மற்றும் 535Nm டார்க் திறன் கொண்ட பின் மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த மாடலுக்கு ஆல்-வீல்-டிரைவ் திறன் கிடைத்ததுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் 60kWh அல்லது 80kWh பேட்டரி பேக்குகளை பொருத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. 60kWh பேட்டரி பேக் சுமார் 325 கிமீ ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் 80kWh பேட்டரி பேக் 435-450 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டது.
எவ்வாறெனினும், ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e ஆகிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி விவரங்கள் இதுவரை நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications