சென்னை: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் சீனாவின் ஷான்சி ஆட்டோமொபைல் குரூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ளது மஹிந்திரா.
JSW குரூப் போட்ட கோட்டில் இப்போது ரோடு போடப்போகிறதா மஹிந்திரா என்ற கேள்வி எழுந்தது. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவின் முதலீடுகளுக்கு இந்திய அரசின் ஒப்புதல் கட்டாயமாக்கியது. இதன் வாயிலாக சீனாவின் முதலீடுகளையும், சீனாவுக்கு தொடர்புடைய முதலீடுகளையும் தொடர்ந்து இந்திய அரசு தடுத்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தான் JSW குரூப் ஆட்டோமொபைல் துறையில் இறங்குவதற்காக சீனாவின் SAIC மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்ஜி மோட்டார்ஸ் உடன் நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பின்பு புதிய கூட்டணி நிறுவனத்தை அமைத்தது வெற்றிக்கண்டது. தற்போது எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் JSW குரூப் தலைமையில் இயங்கி வருகிறது.
இதேபோல் தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சீனாவின் ஷான்சி ஆட்டோமொபைல் குரூப் (Shaanxi Automobile Group) இணைந்து இந்தியாவில் சுமார் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக இந்திய அரசின் ஒப்புதல் கட்டாயம் பெற உள்ளதாக ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் தெரிவித்தது.
இந்த கூட்டணி நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகள் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைக்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் கூறப்பட்டது.
இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ராய்டர்ஸ் செய்தியில் தேவையற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை இல்லை என்றும், இந்த செய்திக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியால் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
சோலார் பேனல் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவுக்கு நிபுணத்துவம் இல்லாததால், சீனாவின் முதலீட்டை எளிமைப்படுத்த இந்திய அரசு முயற்சித்து வருகிறது.
பி.ஒய்.டி., கிரேட் வால் மோட்டார் மற்றும் எஸ்ஏஐசி-யின் எம்.ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இந்திய அரசு இதற்கு முன் முட்டுக்கட்டை போட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பி.ஒய்.டி நிறுவனத்தின் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு விண்ணப்பம் இன்று வரையில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications