இந்திய ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஆதிக்கம் செய்து வந்த நிலையிலும், மஹிந்திரா குரூப் மோமசமான நிலையிலும் ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான நிர்வாகம் ஸ்கார்பியோ கார் அறிமுகத்தின் மூலம் மாபெரும் வெற்றியை அடைந்தனர். இதேவேளையில் இன்றைய மார்டன் உலகிற்கு ஏற்றவாறு கார்களை தயாரிக்கவும், மஹிந்திரா-வின் 2.0 பாதைக்கு அடித்தளமாக சென்னை டெஸ்டிங் மற்றும் டெவலப்மென்ட் சென்டர் இருந்தது. .
சென்னையில் டிசைன், டெஸ்டிங் செய்யப்பட்ட முதல் கார் XUV700 இந்த காரின் வெற்றி அடுத்தடுத்த கார்களிலும் எதிரொலிப்பது மட்டும் அல்லாமல் புது லோகோ உடன் மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனம் அசத்தி வருகிறது. இன்றளவும் SUV, MPV கார் வாங்க வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் மஹிந்திரா கார்கள் முக்கிய தேர்வாக உள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா தலைமையில் தற்போது மஹிந்திரா குழுமம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திட்டம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இப்பிரிவை மேம்படுத்தும் முயற்சியில் சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு பகுதியில் இருக்கும் மஹிந்திரா ரிசர்ச் வேலி பகுதியில் புதிதாக பேட்டரி டெஸ்டிங் லேப் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதன் முதலில் பெரியளவில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் மஹிந்திரா குழுமம் தான், இந்தியாவில் டெஸ்லா-வாக அறியப்பட்ட மஹிந்திரா குழுமம் பல்வேறு காரணத்திற்காக இதை நிறுத்தியது. தற்போது மீண்டும் டாடா மோசட்டார்ஸ் உடன் போட்டிப்போடும் வகையில் மஹிந்திரா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு XUV 400 கார்-ஐ அறிமுகம் செய்தது.
இந்த XUV400 கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இதை மேம்படுத்தும் நோக்கத்துடனும், அடுத்தடுத்த கார்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடனும் மஹிந்திரா சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பேட்டரி டெஸ்டிங் லேப் உருவாக்கியுள்ளது. இதை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த பேட்டரி டெஸ்டிங் லேப் மூலம் குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
இதேபோல் செய்யாறு சிப்காட் பகுதியில் மஹிந்திரா குரூப் 290 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய EV Crash Test Lab கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டை மஹிந்திரா குரூப் மூளையாக கொண்டு இயங்கி வருகிறது, தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலை இல்லாமல் இருப்பது பெரும் இழப்பாக பார்க்கப்படும் வேளையில் விரைவில் புதிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பார் என நம்புவோம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications