மெய்யாலுமே நீங்க கிரேட் சார்! கொரோனா வைரஸ் போராட்டத்தில் களம் இறங்கும் ஆனந்த் மஹிந்திரா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதாரணமாக தள்ளு வண்டி போட்டு பிழைக்கும் அப்பத்தா தொடங்கி அம்பானி வரை எல்லோரின் பிழைப்புகளிலும் மண் அள்ளிப் போட்டு இருக்கிறது இந்த கொரோனா வைரஸ்.

 

இந்த மாதிரியான இக்கட்டான நேரங்களில் தான், பல இடங்களில் மனிதர்களுக்குள் மனிதம் இருப்பது வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அப்படி ஒரு மனிதத்தைத் தான் ஆனந்த் மஹிந்திரா இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழும நிறுவனங்களின் தலைவர். ட்விட்டரில் அடிக்கடி தன் கருத்துக்களை வெளிப்படையாக பதிவிட்டு லைக்ஸ் அள்ளுபவர். தொழிலபதிபர். இதை எல்லாம் தாண்டி மீண்டும் தன் மனிதம் மற்றும் தொழிலபதிபராக தன் தேசத்துக்கான கடமை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி என்ன சொல்லிவிட்டார்...? வாருங்கள் பார்ப்போம்.

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு

"நோய் தொற்று நிபுணர்களின் பல அறிக்கைகளையும் பார்த்தேன். இந்த கொரோனா நோய் தொற்று கிட்டத்தட்ட இந்தியாவில் ஸ்டேஜ் 3-ல் இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலரின் உயிர் பறி போக இருக்கிறது. இது இந்திய மருத்துவ உள்கட்டமைப்பின் மீது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்" எனச் சொல்லி இருக்கிறார்

 

நோய் தொற்று குறையலாம்

மேலும் தன் ட்விட்டரில் "அடுத்த சில வாரங்களுக்கு லாக் டவுன் செய்வதால், நோய் தொற்று குறையலாம், மருத்துவத் துறை மீதான அழுத்தம் கொஞ்சம் குறையலாம். இருப்பினும், நாம் தற்காலிகமாக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். அதோடு நமக்கு வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

களம் இறங்குகிறோம்

களம் இறங்குகிறோம்

"இந்த எதிர்பாராத நோய்க்கு பதில் அளிக்கும் விதத்தில், மஹிந்திரா குழுமம், தன் உற்பத்தி ஆலைகளில் வெண்டிலேட்டர்களை தயாரிப்பது எப்படி..? என உடனடியாக வேலையில் இறங்க இருக்கிறோம். அதோடு மஹிந்திரா ஹாலிடேஸ் ரிசார்ட்களை, தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" எனச் சொல்லி ஒரு தொழிலதிபராக தன் கடமையைச் செய்து இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

நாங்க ரெடி

நாங்க ரெடி

மேலும் "தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க, எங்கள் திட்டக் குழுவினர்கள், இந்திய அரசு மற்றும் இந்திய ராணுவத்துக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். எங்கள் மஹிந்திரா ஃபவுண்டேஷன் ஒரு நிதியை உருவாக்கி, எங்கள் சப்ளை செயினில் அதிகம் அடி வாங்கி இருக்கும் சிறு குறு தொழில்முனைவோர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு உதவ இருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறார்.

100 % சம்பளம்

100 % சம்பளம்

"மஹிந்திரா ஃபவுண்டேஷனின் நிதியில் தொண்டர்கள் தங்கள் பங்களிப்பையும் கொடுக்கலாம். மேலே சொன்ன நிதிக்கு, நான் என் 100 சதவிகித சம்பளத்தைக் கொடுப்பேன். வரும் மாதங்களில் இன்னும் நிறைய கொடுக்க இருக்கிறேன், மற்றவர்களும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனச் சொல்லி முடித்து இருக்கிறார் ஆனந்த மஹிந்திரா. மெய்யாலுமே நீங்க க்ரேட் சார். இவர் செய்த ட்விட்களைக் காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mahindra group working to produce ventilators ready to give resorts for temporary hospitals

The mahindra goup chairman anand mahindra said they are working on how their manufacturing facilities can make ventilators. and ready to offer their resorts as temporary care facilities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X