இந்தியாவின் தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான மஹிந்திரா குழும கம்பெனிகளில் முக்கிய கம்பெனியாக இருப்பது மஹிந்திரா & மஹிந்திரா.

இந்த கம்பெனியின், ஜூன் 2020 காலாண்டுக்கான, கன்சாலிடேடட் நிகர லாபக் கணக்குகள் வெளியாகி இருக்கின்றன. அதில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் 2019 காலாண்டை விட 97 % சரிந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது.
ஜூன் 2019 காலாண்டில் மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனியின் நிகர லாபம் 2,259 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2020 காலாண்டில் நிகர லாபம் வெறும் 67 கோடி ரூபாயாக கணக்கு காட்டி இருக்கிறார்கள். ஆக 97 சதவிகிதம் நிகர லாபம் காணாமல் போய் இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனியின் வருவாய் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 12,805 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஜூன் 2020 காலாண்டில் 5,589 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி இந்த ஜூன் 2020 காலாண்டில் 27,565 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறார்களாம். ஆனால் ஜூன் 2019 காலாண்டில் 1.23 லட்சம் வாகனங்களை விற்று இருக்கிறார்களாம். இது 78 சதவிகித சரிவு.
அதே போல டிராக்டர் விற்பனையும், கடந்த ஜூன் 2019 காலாண்டை விட, இந்த ஜூன் 2020 காலாண்டில் 22 % குறைவாக 64,140 டிராக்டர்களை மட்டுமே விற்பனை செய்து இருக்கிறார்களாம்.
வாகனங்கள் ஏற்றுமதி (டிராக்டரையும் சேர்த்து) 72 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2019 காலாண்டில் 10,923 ஆக இருந்த வாகன ஏற்றுமதி, இந்த ஜூன் 2020 காலாண்டில் 3,109 ஆக சரிந்து இருக்கிறதாம்.
ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் இத்தனை மோசமாக வருவதற்கு, வழக்கம் போல, கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையே (இரு சக்கர வாகனங்களைத் தவிர) 81.5 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications