இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் மஹிந்திரா குழுமம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் பல துறைகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது. குறிப்பாக வாகன வியாபாரத்தில் விவசாயிகளுக்கு உதவும் டிராக்டர் உற்பத்தியில் மிக பேர் போனது. இதில் புகழ்பெற்ற ஒரு நிறுவனமும் கூட. இப்படி உலகளவில் மஹிந்திராவின் வாகனங்களுக்கு தனி மரியாதை உண்டு.
இப்படி ஒரு நிறுவனம் சுமார் 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். அதெல்லாம் சரி எதற்காக இந்த பணி நீக்கம் செய்தது? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன காரணம்
கடந்த ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கொரோனாவின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக வாகன வணிகத்தில் பெரும் சரிவினைக் கண்டது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த நிறுவனம், இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வாகனத்துறையில் வீழ்ச்சி
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் உள்நாட்டு வாகன தொழிலில் முடக்கம் ஏற்பட்ட நிலையில், 300 நிர்வாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது மஹிந்திரா. மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு, இந்த நிதியாண்டில் இதுவரை 27.52 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தொழில் மதிப்பு 13.2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
பல உயர் அதிகாரிகள் பணி நீக்கம்
மஹிந்திராவின் இந்த பணி நீக்கத்தில் பல மூத்த உயர் அதிகாரிகளும் உண்டு. குறிப்பாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பார்த்தசாரதி உள்பட என்றும் கூறப்படுகிறது. இவர் தவிர இன்னும் மஹிந்திரா குழுமத்தின் மொபைலிட்டி சேவையின் தலைவர், இந்த குழுமத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 300 பேர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பின் ஒரு பகுதி
நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு எதிர்கால பணிகளுக்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதிக சுறுசுறுப்பு, அதிக உற்பத்தி திறன் மற்றும் விரைவான வளர்ச்சிக்கு அமைப்புக்கு தேவையான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications