நெருக்கடியில் உள்ள ஆட்டோமொபைல் துறைக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் பட்ஜெட் 2021ல், பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தது மத்திய அரசு.
குறிப்பாக வாகன அழிப்பு திட்டம், ஆட்டோமொபைல் துறைக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் வந்தது.
எனினும் அதே நேரத்தில் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு வரியை அதிகரித்துள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு
இது இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக வந்தது. இது ஒரு புறம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தினாலும், இறக்குமதி பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி இறக்குமதி பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் பட்சத்தில், அது குறுகிய காலத்தில் வாகனங்களின் உற்பத்தி விலையினை அதிகரிக்கும். இதனால் வாகனங்களின் விலை அதிகரிக்க உந்தப்படலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது.
வாகன விலை அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாதத்தில் தான் பல்வேறு வாகன நிறுவனங்கள், வாகன விலையை அதிகரித்தன. இந்த நிலையில் உதிரி பாகங்கள் விலை அதிகரித்தால், அது மீண்டும் உற்பத்தி செலவினை அதிகரிக்கும். இதனால் மீண்டும் வாகன விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் சூசகமாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா விலை அதிகரிக்கலாம்
அதோடு அதிகரிக்கும் மூலதன பொருட்களின் விலையை பொருத்து வாகனத்தின் விலை அதிகரிக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனாவுக்கு மத்தியில் பலத்த பின்னடைவை சந்தித்த நிலையில், அதன் வட அமெரிக்க வர்த்தகத்தில், பணி நீக்கங்களையும் செய்தது. மேலும் இது குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது மஹிந்திரா.
மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு
ஏற்கனவே கடந்த ஜனவரியில் விலையை அதிகரித்தோம். எனினும் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் விலை அதிகரிப்பு இருந்தாலும் இருக்கலாம். இது மூலப்பொருட்களின் விலையை பொறுத்து இருக்கும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் நிர்வாக தலைவர் & விவசாய துறை தலைவருமான ராஜேஷ் ஜெஜுரீகர் கூறியுள்ளார்.
உற்பத்தி செலவுகள்
கடந்த மாதம் தான் இந்த நிறுவனம் 1.9% விலையை அதிகரித்தது. இந்த நிலையில் மீண்டும் மூல பொருட்கள் விலையானது அதிகரித்து வருகிறது. இது உற்பத்தி செலவினை மீண்டும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக விலையை அதிகரிக்க இது தூண்டலாம் என இந்த நிறுவனம் கூறியுள்ளது மற்றொரு விலை அதிகரிப்பினை கொண்டு வரலாமோ என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த, வாகனத் துறையானது, தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications