இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் இரு நிறுவனங்கள் மட்டுமே EV உற்பத்தியில் இறங்காமல் உள்ளது.
ஒன்று மாருதி சுசூகி மற்றொன்று இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கென அடித்தளமிட்ட முதல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இத்துறையில் பெரிய அளவில் வளராமலேயே உள்ளது.
இதேவேளையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடந்த 3 வருடத்தில் அறிமுகம் செய்த அனைத்து பெட்ரோல், டீசல் கார்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டுக் கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் (டெக் வசதிகள்) மஹிந்திரா தனது கார்களில் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது தனது கவனத்தை எலக்ட்ரிக் வாகனங்கள் மீது முழுமையாகத் திருப்பியுள்ளது, இதற்கான முதல் படியை படு பயங்கரமாக வைத்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனத்திற்குத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ள நிலையில் இத்துறைக்காகப் பிரத்தியேகமாகத் தனி நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன நிறுவனம்
இந்தப் புதிய எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தைத் துவங்கவும், அதன் மூலம் உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றைச் செய்ய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்து தற்போது பிரிட்டிஷ் இண்டர்நேஷ்னல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சுமார் 1,925 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
70,070 கோடி ரூபாய் மதிப்பீடு
இப்புதிய முதலீட்டின் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மதிப்பு 9.1 பில்லியன் டாலர் அதாவது 70,070 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டை உறுதி செய்யும் வகையில் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தற்போது முன்னோடியாக இருக்கும் நிலையில், மஹிந்திரா-வின் வருகை பெரும் போட்டியை உருவாக்கும். இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இந்த 1925 கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 70000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலேயே திரட்டியுள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.
8000 கோடி ரூபாய் முதலீடு
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகன பிரிவில் சுமார் 8000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications