இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா (SAVWIPL) ஆகியவை இணைந்து இந்தியாவில் ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கவும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை பகிர்வது மட்டும் அல்லாமல் இரு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் முக்கியமான இலக்கை அடைய கூட்டணி நிறுவனத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடுத்த சில நாட்களில் மும்பையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய கூட்டணி குறித்து ஆனந்த் மஹிந்திரா மறுப்பு தெரிவித்தாலும், இக்கூட்டம் நடை பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கி திருப்பமாக இருக்கும்.

இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணி வெற்றிகரமாக முடிந்தால் இரு தரப்பும் தங்கள் வாகன தயாரிப்பு, வாகன பிளாட்பார்ம் மற்றும் தொழிற்சாலைகள் பெரிய அளவில் பயன்படுத்தி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா தற்போது இந்திய சந்தையில் விற்கும் செடான்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் மற்றும் வோக்ஸ்வாகன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி ஆகிய ஆடம்பர பிராண்டுகள் ஆகியவை இப்புதிய கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்காது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே ஸ்கோடா தலைவர் இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த கூட்டணியை தேடி வருவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து தான் தற்போது மஹிந்திரா உடன் புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஸ்கோடா ஆட்டோவின் நிர்வாக தலைவரான கிளாஸ் செல்மர் மும்பையில் இருக்கும் வேளையில் இக்கூட்டணி பேச்சுவார்த்தையை இவர் தலைமையில் நடக்க உள்ளது.
இந்த கூட்டணி மூலம் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி பலம் மற்றும் சப்ளை செயின் பலத்துடன் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் அடுத்தடுத்து தனது புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய முடியும். இதற்கு பிரதிபலனாக மஹிந்திராவுக்கு ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் பிராண்டின் தொழில்நுட்பம், காரின் பிளாட்பார்ம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
இது அனைத்தும் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டவை, எனவே இந்த விதிமுறைகள் மாறுப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் இக்கூட்டணிக்காக யார் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறார்கள் என்பதும் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும். மாருதி சுசூகி - டோயோட்டா மத்தியில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒப்பந்தத்திற்கு நிகராக இந்த ஒப்பந்தம் இருக்கும்.
இந்த பேச்சுவார்த்தைகள் முடிந்து, அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கூட்டணி நிறுவனத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளது தெரிகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications