மகேந்திராவின் மெகா ஆஃபர்.. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை.. ரூ.799 முதல் இஎம்ஐ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகேந்திராவின் மெகா ஆஃபர்.. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை.. ரூ.799 முதல் இஎம்ஐ!

 

கடந்த சில ஆண்டுகளாகவே வாகன விற்பனையானது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தான் சற்றே மேம்பட தொடங்கியது. ஆனால் சில மாதங்களுக்குள்ளேயே கொரோனாவின் காரணமாக பெரியளவில் பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலையின் காரணமாக பெரும் பின்னடைவினை சந்தித்து வந்த வாகன விற்பனையானது, நடப்பு ஆண்டில் கொரோனாவால் பெருத்த அடி வாங்கின.

சொல்லப்போனால் கடந்த ஆண்டில் வாகன விற்பனை மட்டும் தான் பாதித்தது. ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக சில மாதங்கள் உற்பத்தியும் கடுமையான சரிவினை சந்தித்தது.

விழாக்கால சலுகைகள்

விழாக்கால சலுகைகள்

இதற்கிடையில் வாகன நிறுவனங்களின் பெரும் எதிர்பார்ப்பே, வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனை அதிகரிக்கும் என்பது தான். இந்த நிலையில் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் மகேந்திரா & மகேந்திரா -வும் சலுகைகளை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை

அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அரசு ஊழியர் சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது. அதன் படி மற்ற சலுகைகளோடு கூடுதலாக அரசு ஊழியர்களுக்கு 11,500 ரூபாய் வரையில் கேஸ் தள்ளுபடி இருக்கும் என அறிவித்துள்ளது. இவற்றோடு குறைவான வட்டி விகிதமும் அறிவித்துள்ளது.

டீலர்களை அணுகலாம்
 

டீலர்களை அணுகலாம்

இன்னும் சில சலுகைகள் பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலமும் வழங்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகள் கிடைக்க அருகிலுள்ள டீலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் உடனடி இஎம்ஐ வசதிக்காக இந்த நிறுவனம் பலவித நிதி நிறுவனங்களுடம் கூட்டு சேர்ந்துள்ளது.

டெலிவரி அதிகரிப்பு

டெலிவரி அதிகரிப்பு

மகேந்திராவின் இந்த சலுகைகள் மகேந்திராவின் அனைத்து தயாரிப்புகளுக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மகேந்திராவின் புதிய new Thar SUV ரக கார்கள் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 9ல் மட்டும் 500 வாகனங்கள் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மகேந்திரா தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த உள்நாட்டு வாகன நிறுவனம் புதிய தார் புக்கிங் 20,000 ஆயிரத்தினை தாண்டி சென்று கொண்டு இருப்பதாக கூறியிருந்தது கவனிக்கதக்கது.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

இந்த புக்கிங் குறித்து பெரும் மகிழ்ச்சி அடைவதாக மகேந்திரா தெரிவித்துள்ளது. மேலும் இது எங்கள் எதிர்பார்ப்புகளையும் உற்பத்தி திறன்களையும் தாண்டியுள்ளதாக, எம் & எம் வாகன நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி விஜய் நக்ரா கூறியுள்ளார். உண்மையில் இது வாகனம் வாங்க சரியான நேரம் தான். குறைந்த வட்டி, இஎம்ஐ சலுகை, செயல்பாட்டுக்கட்டணம் என பல சலுகைகள் உள்ளனவே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahindra mega festival offers on all products, special offers for govt employees

Mahindra & Mahindra announced offers for government employees. Cash discounts up to Rs.11,500, lower interest rates on Mahindra & Mahindra vehicle purchases.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X