2023 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் ரூ.60,000 முதல் ரூ.4.2 லட்சம் வரை கவர்ச்சிகரமான டிசம்பர் மாத தள்ளுபடி சலுகைகளை பல்வேறு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் உள்ள எலக்ட்ரானிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ் ஆகியவை முன்னிலையில் உள்ளன.இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட அதிகமாக இந்தாண்டு டிசம்பர் மாத தள்ளுபடி சலுகைகளை வாரி இறைத்துள்ளன.

இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள தாராள டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் விவரம்:
Mahindra XUV400 - ரூ.4.2 லட்சம் வரை தள்ளுபடி
மகிந்திரா எக்யூவி400 எலக்ட்ரிக் மாடலுக்கு ரூ.4.2 லட்சம் வரை மிகத் தாராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் எலக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) அம்சம் இல்லை.
அத்துடன் XUV400 ESC வெர்ஷன்களுக்கு ரூ.3.2 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. என்ட்ரி லெவல் EC மாடல்களுக்கு ரூ.1.7 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
Hyundai Kona EV - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி
இந்தியாவில் ஜீரோ- எமிஷன் வாகனங்களை பிரபலப்படுத்தும் வகையில் ஹூண்டாய் தனது Kona EV காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் வாகனம் 39.2 கிலோவாட் பேட்டரி மற்றும் ஸ்டாண்டர்டு ஏசி சார்ஜர் கொண்டுள்ளது. அத்துடன் 50kW DC சார்ஜருடன் 6 மணிநேரத்தில் முழு சார்ஜ் செய்ய முடியும்.
MG ZS EV - ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி
சில மாதங்களுக்கு முன்புதான் ZS EV காரின் விலைகளை குறைத்தது. இப்போது அந்த கார் கம்பெனி ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்து தங்களது கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பும்வகையில் செய்துள்ளது.
ZS EV வாகனங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.50,000, லாயல்டி மற்றும் கார்ப்பரேட் டீலிங் மூலமாக ரூ.50,000 ரொக்கச் சலுகையும் அளிக்கப்படுகிறது. எம்ஜி இசட்எஸ் ஈவியின் விலை ரூ.23.38 லட்சம் ஆகும்.
MG Comet - ரூ.65,000 வரை தள்ளுபடி
எம்ஜி நிறுவனம் காமட் மாடல் காரை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே மிகவும் மலிவான எலக்ட்ரிக் வாகனமாக இந்தக் கார் விளங்குகிறது. ரூ.7.98 லட்சத்தில் தொடங்கி காமட் கார், Pace, Play, Plush ஆகிய 3 மாடல்களில் கிடைக்கிறது.
2023 மாடல் ஸ்டாக்குகளை முழுவதும் விற்றுத் தீர்ப்பதற்கு முடிவு செய்துள்ள எம்ஜி நிறுவனம் காமட் காருக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. லாயல்டி, எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் டீலிங் மற்றும் ரொக்கச் சலுகைகள் மூலம் கார் நிறுவனங்களின் இந்த டிசம்பர் மாத தள்ளுபடி சலுகை அறிவிப்பு கவர்ச்சிகரமாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications