வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சரிசமமாகப் போட்டிப்போடும் வகையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கார்களின் தரம் மற்றும் டெக் சேவைகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் டாடா வெளியிட்டுள்ள பல கார்களின் தரம் சிறப்பாக இருந்ததை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த வரிசையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள புதிய எஸ்யூவி கார் தான் மஹிந்திரா XUV 700. இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து பெரிய அளவிலான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மஹிந்திரா XUV 700 கார்களின் புக்கிங் இன்று துவங்கப்பட்டது.
இந்திய தயாரிப்பு
இந்திய தயாரிப்புக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உண்டு, ஆனால் இந்திய தயாரிப்புகளை விடவும் வெளிநாட்டுத் தயாரிப்புகள் சிறப்பாக இருக்கும் பட்சத்திலும், விலை குறைவாக இருக்கும் பட்சத்திலும் நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இந்திய சந்தையில் வர்த்தக மாற்றம் இருக்கும்.
மஹிந்திரா XUV 700
அந்த வகையில் மஹிந்திரா XUV 700 விலையிலும் சரி, காரின் தரம் மற்றும் டெக் சேவையிலும் சரி அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் உள்ளது. இதன் காரணமாக மஹிந்திரா XUV 700 கார் அறிமுகம் செய்யும் முன்பு இருந்தே அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.
25,000 கார்கள் புக்கிங்
புகழின் உச்சத்தில் இருக்கும் வேளையில் மஹிந்திரா XUV 700 காருக்கான புக்கிங் துவங்கப்பட்டு உள்ளது. இதன் முலம் முதல் 57 நிமிடத்திலேயே மஹிந்திரா அனுமதித்த 25,000 கார்களும் புக்கிங் செய்யப்பட்டு மக்கள் அதிர்ச்சி அளித்து உள்ளனர். மஹிந்திராவின் இந்த வெற்றி இந்திய தயாரிப்புக்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
57 நிமிடத்தில் 25,000 கார்கள் என்பது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய சாதனை என்று மஹிந்திரா இந்த வெற்றியை கூறுகிறது. இந்த முதல் 25,000 கார்களை முழுமையாக 6 மாதம் ஆகும் என அறிவித்துள்ளார். ஓலா இதற்கு முன்பு இதுபோன்று விற்பனையில் சாதனை படைத்திருந்தாலும் அது இரு சக்கர வாகனம்.
அடுத்த ஆன்லைன் புக்கிங்
மஹிந்திரா மீண்டும் அடுத்த 25,000 கார்களுக்கான புக்கிங்-ஐ வெள்ளிக்கிழமை அதாவது நாளை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. இந்த முறை ஒலாவும் சரி, மஹிந்திராவும் சரி வாகன புக்கிங் சேவையை ஆன்லைன் மூலம் செய்துள்ள காரணத்தால் விருப்பமானவர்கள் வேகமாக யாருடைய துணையும் இல்லாமல் புக்கிங் செய்துள்ளனர்.
மஹிந்திரா XUV 700 கார் விலை
மஹிந்திரா XUV 700 கார் விலை 12.49 லட்சம் ரூபாய் முதல் 20.29 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. இதே வேளையில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2,60,000 பேர் இக்கார்களுக்காக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications