M&Mம்மின் பிரமாண்ட திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்..!

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் அடுத்த 2 முதல் 7 ஆண்டுகளில் அதன் குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களை பங்கு சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.

எம் & எம் குழுமத்தில் உள்ள நிதித்துறை, உள்கட்டமைப்பு, எனர்ஜி, டெக்னாலஜி, மொபைலிட்டி, கிராமப்புறம் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளதாக இந்த குழுமத்தின் துணை நிர்வாக அதிகாரி அசீஷ் ஷா மிண்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் நஷ்டம் தரும் சில வணிகங்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஷா தெரிவித்துள்ளார், சரி வாருங்கள் இதனை பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

 பங்களிப்பு குறைவு தான்

பங்களிப்பு குறைவு தான்

மகேந்திரா குழுமத்தில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. எனினும் அவற்றின் ஒட்டுமொத்த வருவாய் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது, என அடுத்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான பவன் கோயாங்காவுக்கு பின், அந்த பதவிக்கு வரவுள்ள ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல செயல்திறன்

நல்ல செயல்திறன்

மேலும் இந்த நிறுவனங்கள் நன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவை இலாபங்களை காட்டுவதற்கும், ஒரு வலுவான செயல்திறனை காட்டுவதற்கும், அவற்றின் செயல்திறனைக் காட்டியுள்ளன. அவற்றில் பல லாபகரமானவை. அதோடு அவற்றிற்கு குழுமத்தில் இருந்து எந்த முதலீடுகளும் தேவையில்லை என்றும் ஷா கூறியுள்ளார்.

இவை எங்களின் ஜெம்ஸ்

இவை எங்களின் ஜெம்ஸ்

இந்த 10 நிறுவனங்களும் ஜெம்ஸ் என்று பெருமைபடக் கூறியுள்ளார் ஷா. மேலும் அடுத்த 2 - 3 வருடங்களில் 2 - 3 நிறுவனங்களை பொது பங்கு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் சில 3 - 5 வருடங்களில் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மற்றவை 5 - 7 வருடங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஷா கூறியுள்ளார்.

இழப்பு வணிகம் விற்பனை

இழப்பு வணிகம் விற்பனை

அதோடு தங்களது இழப்புகளை ஏற்படுத்தும் சில வணிகங்களை நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பாக சாங்சோங் மோட்டார் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் ஸ்டார்டப் நிறுவனம் ஜென்சோ மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறு விமான தயாரிப்பு நிறுவனமான கிப்ஸ் ஏரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செம வளர்ச்சி காணும்

செம வளர்ச்சி காணும்

மேலும் எம் & எம்மின் சப்ளை சங்கிலி வணிகம் குறித்தும் ஷா உற்சாகமாக இருக்கிறார். Bristlecone மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர தயாராக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். அடுத்த 5 - 10 ஆண்டுகளில் நாங்கள் 10 மடங்கு வளர்ச்சியினை எதிர்பார்க்கிறோம். மேலும் மேற்கண்ட 10 நிறுவனங்களை வளர்ச்சி பாதையில் வைப்பது எங்களின் முன்ணுரிமை என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+