இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கான மோகம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக நடப்பாண்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் 54 சதவீத கார்கள் எஸ்யூவி பிரிவை சேர்ந்தவை என்பதே இதற்கு உதாரணம்.
எனவே பல்வேறு நிறுவனங்களும் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியாவில் பெரும்பாலும் டாடா பஞ்ச் (Tata Punch) டாடா நெக்ஸான்( Tata Nexon) ,ஹூண்டாய் கிரெட்டா ( Hyundai Creta) , கியா சோனெட் (Kia Sonet) , மாருதி சுசுகி பிரெஸ்ஸா( Maruti Suzuki Brezza ), மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய எஸ்யூவி கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன.

இவ்வாறு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் எஸ்யூவி கார்கள் அதிக அளவில் விற்பனையாகி இருந்தாலும் ஒரு லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி மகேந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என்பது தெரியவந்துள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான இந்த 11 மாத காலத்தில் 1, 56,169 மகேந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த எஸ்யூவி கார் மகேந்திரா ஸ்கார்பியோ என்பது தெரியவந்துள்ளது. மகேந்திரா ஸ்கார்பியோவை பொறுத்தவரை ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio-N), ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) என்ற இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஸ்கார்பியோ என் ரக கார்கள் 13 லட்சத்திலிருந்து 24 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கார்பியோ கிளாசிக் ரக கார்கள் 13 லட்சத்திலிருந்து 17 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .
மகேந்திரா ஸ்கார்பியோ என் காரினை பொறுத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. 2.0 லிட்டர் mStallion TGDi petrol என்ஜினும், 2.2-லிட்டர் mHawk CRDi diesel என்ஜினும் கொண்டிருக்கிறது. இரண்டு கார்களுமே 6-speed MT மற்றும் 6-speed AT ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
மகேந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை பொறுத்தவரை ஒரு என்ஜின் கொண்டது. 2.2 லிட்டர் mHawk CRDi diesel என்ஜின் கொண்ட இந்த கார் 6-speed manual gearbox கொண்டுள்ளது. மகேந்திரா நிறுவனம் 2002ஆம் ஆண்டில் முதன்முறையாக ஸ்கார்பியோ மாடலை அறிமுகம் செய்தது. அப்போது முதல் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் காராக இது இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications