இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகமான மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி கார் வெறும் ஆப்ரோடு வாகனமாக இருக்கக்கூடாது, ஒரு பேமலி காராக இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பார்த்து பார்த்து டிசைன் செய்து மஹிந்திரா குழுமம் அறிமுகம் செய்தது. இந்த கார் அறிமுகம் செய்த நாளில் இருந்து பிற பிராண்டுகள் குறித்த தேடலும், விவாதமும் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Mahindra Thar Roxx கடந்த ஒரு மாதத்தில் அனைத்து மாடல்களையும் அறிமுகம் செய்து விலையும் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஐந்து கதவு கொண்ட Mahindra Thar காருக்கான முன்பதிவுகள் இன்று திறக்கப்பட்டது.

புக்கிங் திறந்த ஒரு மணி நேரத்திற்குள், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கூட நினைத்திடாத வகையில் அபரிமிதமான வரவேற்பைப் பெற்று, சுமார் 1.76 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று (அக்டோபர் 3) காலை 11 மணிக்கு துவங்கப்பட்ட Mahindra Thar Roxx காருக்கான முன்பதிவு வெறும் ஒரு மணிநேரத்தில் 1,76,281 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டு உள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மக்கள் மத்தியில் Mahindra Thar Roxx காருக்கு இருக்கும் அபரிமிதமான டிமாண்ட் பார்த்து ஆச்சரியமடைந்தார், அவரது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் மிஞ்சியது என்று கூறினார். இந்த வெற்றியை அவர் பிராண்டின் வலுவான வாடிக்கையாளர் தளம் மற்றும் அவரது குழுவின் முயற்சிகளுக்குக் காரணம் என்று டிவிட்டரில் கூறினார்

தார் ராக்ஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் உடன் MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L உள்ளிட்ட ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மஹிந்திரா நிர்வாகம் இன்று புக்கிங் செய்தவர்களுக்கு அடுத்த மூன்று வாரங்களில் காரின் தோராய டெலிவரி தேதிகளை படிப்படியாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக தார் ராக்ஸ் காரை ஆன்லைன் அல்லது மஹிந்திரா டீலர்களிடம் முன்பதிவு செய்யும் வழிகளை வழங்கியுள்ளதால் நாடு முழுவதும் இருக்கும் மஹிந்திரா தார் பிரியர்கள் ஆர்டர்களை குவித்துள்ளனர். தார் ராக்ஸுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு, இந்தியாவில் எஸ்யூவிகளுக்கான வலுவான தேவையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் தார் பிராண்டை சந்தையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய மஹிந்திராவின் வெற்றியையும் வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications