இந்தியாவின் மிக முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனமாக திகழும் மஹிந்திரா & மஹிந்திரா (M&M) நிறுவனம் கடந்த 15 வருடத்தில் தனது வடிவமைப்பு, தரம் ஆகியவற்றை மாறியது மூலம் எஸ்யூவி கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் பார்த்து வருகிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XUV 7XO மற்றும் XEV 9S கார்களுக்கு சுமார் 20000 கோடி ரூபாய் மத்திபிலான 93000 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டு உள்ளவேளையில் உற்பத்தி மற்றும் டெலிவரியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது மஹிந்திரா குழுமம். இதற்காக புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கான இடத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் இறுதி செய்ய உள்ளது.

இந்த ஆலை மூலம் மஹிந்திரா நிறுவனம் 2026-27 ஆம் நிதியாண்டில் கார் விற்பனை திறனை 10 லட்சத்தை தாண்டும் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள் தற்போது வைத்திருக்கும் உற்பத்தி ஆலைக்கு அருகிலேயே புதிய ஆலை அமைக்கும் அல்லது விரிவாக்கம் செய்யும்.
ஆனால் மஹிந்திரா தற்போதுள்ள உற்பத்தி ஆலைக்கு பகுதியை தாண்டி வெளியேயும் புதிய ஆலை அமைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விரைவான லாஜிஸ்டிக்ஸ் வசதிகள் காரணமாக தற்போதுள்ள ஆலைகளுக்கு அருகிலேயே புதிய ஆலை அமைக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. இருப்பினும், வாகனங்களை நாடு முழுவதும் டெலிவரி செய்வதற்கு ரயில் இணைப்பு முக்கிய காரணியாக இருக்கும் என்று இந்நிறுவனத்திழ் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 2025-ல் உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் 4-ஆம் இடத்தில் இருந்த மஹிந்திரா, 2026-ல் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் டாடா மோட்டார்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளது பெரிய அளவில் விற்பனையில் முன்னேறியுள்ளது.
2025 ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தின் வாகன பதிவுகள் சுமார் 5.81 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளன. 2024-ல் இது 4.90 லட்சமாக இருந்தது. எஸ்யூவி போர்ட்ஃபோலியோ மற்றும் புதிய எலக்ட்ரிக் வாகன அறிமுகங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
மஹிந்திரா புதிய ஆலை அமைப்பது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி உத்தியின் முக்கிய பகுதியாக உள்ளது. மஹிந்திரா தற்போது இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்த திட்டங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த புதிய தொழிற்சாலை தமிழ்நாட்டிலும் வர வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications