இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிக வேகமாக மாறிக்கொண்டுஇருக்கிறது.பாரம்பரிய இண்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்கள் (EVs) நோக்கி மக்கள் மாறத் தொடங்கியுள்ளனர்.எனவே,இந்த மாற்றத்தை மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ்,மாருதி சுசூகி போன்ற உள்ளூர் நிறுவனங்கள் ஏற்கனவே ஆதரிக்கின்றன.இந்நிலையில், உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழைய தயாராக இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திர குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திர சமீபத்தில் சமூக வலைதள பதிவில் டெஸ்லாவின் இந்திய நுழைவுக்கு தன் நிறுவனம் எப்படி பதிலளிக்கப் போகிறது என்பதைத் தன்னம்பிக்கையுடன் விளக்கினார்.இதன் மூலம் இந்திய ஆட்டொமொபைல் துறையில் போட்டி மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் மஹிந்திராவின் தன்னம்பிக்கை எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியளவில் விரைவில் தனது விற்பனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.இதையடுத்து, ஒரு சமூக வலைதள பயனர் ஆனந்த் மஹிந்திராவிடம், "டெஸ்லா இந்தியா வந்தால், உங்கள் நிறுவனத்தை அது எப்படி பாதிக்கலாம்? நீங்கள் போட்டிக்கு தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு ஆனந்த் மஹிந்திரா மிகவும் தெளிவான மற்றும் நகைச்சுவையான பதிலை அளித்துள்ளார்.
அதில், 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் திறந்தபோது இதே மாதிரி கேள்விகள் எழுந்தன. 'நீங்கள் மாருதி, டாடா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எப்படி போட்டியிடுவீர்கள்?' என்று கேட்டார்கள். ஆனால், 30 வருடங்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். இன்னும் நூற்றாண்டு முழுவதும், சந்தையில் முன்னணி இடத்தில் இருப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்கிறோம்.
இந்த பதில் இணைய பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும், மஹிந்திராவின் தன்னம்பிக்கையை பாராட்டி, இந்திய நிறுவனங்கள் போட்டியை வெற்றிகரமாக சமாளிக்கத் தெரிந்தவைகள் என கருத்து தெரிவித்தனர்.
டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால், இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர் எதிர்ப்புகள் காரணமாக இதுவரை எந்தவொரு உறுதியான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.இப்போது, டெஸ்லா மும்பையில் தனது முதல் ஷோரூம் (Showroom) தொடங்கத் திட்டமிட்டுள்ளது. டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் LinkedIn போன்ற வேலைவாய்ப்பு தளங்களிலும் புதிய வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில்,ஸ்டோர் மேனேஜர்,விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள்,டெலிவரி மற்றும் பயன்பாட்டு மேலாளர் போன்ற பணியிடங்கள் அடங்கும்.மேலும், டெஸ்லா புது தில்லியில் ஒரு புதிய ஷோரூமுக்கு இடம் தேடி வருகிறது. இது, இந்தியாவில் டெஸ்லா விற்பனை மற்றும் சேவையை விரைவில் தொடங்கும் என்று காட்டுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் 70% முதல் 100% வரை உள்ளது. இதை எலோன் மஸ்க் சில ஆண்டுகளாக குறைக்க கோரிக்கைகள் விடுத்து வருகிறார்.மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற இந்திய நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. மஹிந்திரா XUV400 மற்றும் டாடா Nexon EV போன்ற மாடல்கள் இந்திய சந்தையில் நல்ல விற்பனையைப் பெற்றுள்ளன.இந்தியாவில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் (EV Charging Stations) போதுமான அளவில் இல்லை. இது டெஸ்லாவிற்கும், மற்ற மின்சார வாகன நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய சவாலாக உள்ளது.
மஹிந்திரா ஏற்கனவே மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. மஹிந்திரா XUV400 மற்றும் எதிர்வரும் Born Electric தொடர் வாகனங்கள் மூலம் மின்சார வாகன சந்தையில் தன் மொத்த பங்கை அதிகரிக்க மஹிந்திரா முயன்றுவருகிறது.ஆனால், டெஸ்லா இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை தொடங்கும் என்ற தகவல்கள் வருகின்றன. இது நிகழ்ந்தால், மஹிந்திரா உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு பெரிய போட்டியாக அமையும்.
இந்த போட்டி வெறும் விற்பனை மட்டும் அல்ல, இந்திய வாகன உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கும், நவீன தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும். எதிர்காலத்தில், மின்சார வாகனங்கள் இந்தியாவின் முக்கிய போக்குவரத்து தீர்வாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications