இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களை விரும்பி வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்கின்றன.
இந்திய சந்தையில் காம்பேக்ட்டான எஸ்யூவி கார்களுக்கான போட்டி அதிகம். ஏற்கனவே மாருதி பிரஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue )மற்றும் கியா சோனட் (Kia Sonet) ஆகிய கார்கள் வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்தவையாக இருக்கின்றன.

இவற்றுக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் Mahindra XUV 3XO என்ற எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விட இதன் விலை குறைவு.
மஹிந்திராவின் XUV 3XOவின் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலை 7.49 லட்சம் தான். இதுவே நெக்ஸான் ஆரம்ப விலை 8 லட்சமாகவும், பிரஸ்ஸாவின் விலை 8.34 லட்சமாகவும், வென்யூவின் விலை 7.94 லட்சமாகவும், சோனட்டின் விலை 7.99 லட்சமாகவும் இருக்கிறது. காம்பேக் எஸ்யூவி சந்தையை பிடிக்கும் நோக்கில் விலையை குறைத்து மஹிந்திரா இதனை அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திராவின் XUV 3XO, 1.2 லிட்டர் mStallion TCMPFi பெட்ரோல் என்ஜினை பயன்படுத்துகிறது, இதில் 6-speed MT இருக்கிறது. அதுவே பிரஸ்ஸாவில் K15C 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5-speed MT இருக்கிறது. நெக்ஸானில் Revotron 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5-speed MT செயல்படுகிறது. வென்யூ மற்றும் சோனட் இரண்டிலும், 1.2-litre Kappa பெட்ரோல் என்ஜின் உள்ளது.
கடந்த மே மாத நிலவரப்படி, இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பேக் எஸ்யூவி கார்களின் பட்டியலில் பிரஸ்ஸா தான் முதலிடத்தில் இருக்கிறது. மே மாதம் மட்டும் 14,186 பிரஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நெக்ஸான் கார்கள் 11,457 என்ற எண்ணிக்கையிலும், ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட XUV 3XO கார் 10,510 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளது. வென்யூ கார்கள் 9,327 என்ற அளவிலும், சோனட் 7,433 என்ற அளவிலும் விற்கப்பட்டுள்ளன.
இதில் மஹிந்திராவின் XUV 3XOவின் சிறப்பம்சங்கள் என பார்க்கும் போது, bi-halogen projector headlamp உள்ளது. 16 அங்குல சக்கரங்கள், முன்பக்கம் ஸ்டோரேஜுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், 60:40 என பின்பக்க இருக்கைகள், பின்பக்கத்தில் ஏசி வசதிகள், ஆறு ஏர் பேக்குகள் ஆகியவை உள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications