மஹிந்திரா நிறுவனம் தனது இரு புதிய எஸ்யூவி மாடல்களான XUV 7XO மற்றும் XEV 9S கார்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி புக்கிங் திறந்தது. புக்கிங் திறந்து வெறும் 4 மணி நேரத்தில் மட்டும் சுமார் 93,689 bookings பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 93,689 கார்களின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.20,500 கோடி என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது இந்திய சந்தையில் ஒரே நாளில் பதிவான அதிக எஸ்யூவி புக்கிங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தியா ஆட்டோமொபைல் துறையில் தற்போது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் பெரிய அளவில் ஆய்வு செய்து டிசைன் மற்றும் உற்பத்தியில் பல மாற்றங்களையும், புதுமைகளையும் புகுத்தி வருகிறது. சீனாவுக்கு இணையாக ஆட்டோமொபைல் துறையில் புதிய வடிவமைப்புகளை இவ்விரு இந்திய நிறுவனங்களும் கொண்டு வருகிறது.

இதனால் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களாக ஹூன்டாய், ஹோண்டா, மாருதி சுசூகி போன்றவை புதிய வாடிக்கையாளர்களை பெறுவதில் தினறி வருகிறது. இந்த நிலையில் தான் மஹிந்திரா புதிதாக அறிமுகம் செய்துள்ள இரு எஸ்யூவி மாடல்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளது.
XUV 7XO மாடல்
XUV 7XO கார் ஜனவரி 14 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விலை ரூ.13.66 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.24.92 லட்சம் வரை உள்ளது. ஏற்கனவே ப்ரீ-புக்கிங் முடிந்த நிலையில், புதிய பதிவுகள் ஜனவரி 14 அன்று தொடங்கின. சில வகை கார்களின் டெலிவரி-யை அதே நாளில் தொடங்கியுள்ளது மஹிந்திரா. மீதமுள்ள வகைகளின் டெலிவரி ஏப்ரல் 2026-ல் தொடங்கும். இந்த எஸ்யூவி காரின் முக்கிய போட்டியாளர்களாக டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்காசர் ஆகியவை உள்ளன.
XEV 9S மாடல்
இதேபோல் மஹிந்திராவின் மற்றொரு முக்கிய ஈவி மாடலான XEV 9S என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் ரூ.19.95 லட்சத்தில் (Pack One Above வகை) தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை (Pack Three Above வகை) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது மஹிந்திராவின் INGLO பிளாட்பார்ம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டெலிவரி ஜனவரி 23, 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 59kWh, 70kWh, 79kWh பேட்டரி விருப்பங்களுடன் ARAI ஆய்வின் படி அதிகபட்சம் 679 கி.மீ தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது XEV 9S கார்.
குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் 3 வரிசை, 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது XEV 9S காருக்கு நேரடி போட்டியாளர் யாரும் இல்லை என்பது தனி சிறப்பு.
இரு மாடல்களும் மஹிந்திராவின் சமீபத்திய தயாரிப்பு உத்தியின் பகுதியாகும். XUV 7XO பெட்ரோல்/டீசல் வகைகளில் கிடைக்கிறது. XEV 9S முழு எலக்ட்ரிக் மாடலாக உள்ளது. இந்த 93,689 கார் புக்கிங் மஹிந்திராவின் எஸ்யூவி சந்தையில் வலுவான வர்த்தக நிலையை காட்டுகிறது.
மஹிந்திரா இப்போது எஸ்யூவி பிரிவில் டாடா, ஹூண்டாய், கியா போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியில் உள்ளது. இந்த பதிவு எண்ணிக்கை மற்றும் ரூ.20,500 கோடி மதிப்பிலான புதிய வர்த்தகம் நிறுவனத்தின் வளர்ச்சியும், மக்கள் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
தற்போது வாடிக்கையாளர்களின் முக்கிய கவலை புக்கிங் செய்யப்பட்ட கார்களின் டெலிவரி காத்திருப்பு காலம் தான், உரிய நாளில் கார் கிடைக்குமான என்பது அனைவருக்குமான கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications