தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றனர் . தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு லட்சக்கணக்கான பெண்கள் மத்தியில் நிலவுகிறது.
தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவைத்து வருகிறது . பெண்களை பொறுத்தவரை இந்த மகளிர் உரிமை தொகையை அவர்கள் தங்களுடைய சொந்த விஷயங்களுக்காகவும் ,குடும்ப செலவுகளுக்காகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர் . பெரும்பாலான பெண்கள் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தங்கள் குழந்தைகளின் மற்றும் தங்கள் வீட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடும் செய்கின்றனர்.

சாமானிய குடும்பங்களை சேர்ந்த பெண்களை பொறுத்தவரை மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை என்பது அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் தமிழ்நாடு அரசு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது .
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியிலிருந்து நடைபெறக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அரசின் மிக முக்கியமான ஒரு திட்டமாக இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் வாக்குகளை கவர்வதற்கான ஒரு விஷயமாகவும் இது சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை முடுக்கி இருக்கிறது.
அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வீடு வீடாக சென்று அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். எனவே மகளிர் உரிமை தொகையை வேண்டி விண்ணப்பம் செய்த பெண்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இந்த சூழலில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக நிதித்துறை ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . எனவே நீங்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்திருக்கிறீர்கள் , உங்களுடைய குடும்பத்தில் வருமான வரி செலுத்தக்கூடிய நபர் இல்லை எனும் பட்சத்தில் நிச்சயமாக வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைப்பது உறுதி.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications