உலகிலேயே மிகக் கொடுமையான நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு புற்றுநோய் காரணமாக அமைகிறது.
புற்றுநோய் பொறுத்தவரை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் அதற்கு நாம் சிகிச்சை அளித்து ஓரளவு குணப்படுத்த முடியும் . அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று விட்டால் உயிர் காப்பதே கடினமானதாக மாறிவிடும். தற்போது எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவதை நாம் காண முடிகிறது .

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பாகவும் புற்றுநோயை வளர்வதை தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் கூட தற்போது இந்த புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் மனித சமூகம் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையிலான ஒரு ஆய்வு முடிவு வெளிவந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது . அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சூப்பர் வேக்சின் எனப்படும் ஒரு சூப்பர் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பு மருந்து ஆய்வகத்தில் இருந்து எலிகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் புற்றுநோய் தொடங்குவதற்கு முன்னரே அதனை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டதாக நம்முடைய உடலை எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாற்றுகிறதாம்.
அதாவது இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட எலிகளின் உடம்பில் இருந்த நோய் எதிர்ப்பு மண்டலம் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கு முன்னரே அதனை கண்டறிந்து அவற்றை அழிக்கிறதாம் . புற்றுநோய் செல்கள் உண்டாகி கட்டிகளாக மாறுவதற்கு முன்னரே அவற்றை கண்டறிந்து அழித்து விடுவதாக கண்டுபிடித்து இருக்கின்றனர். புற்றுநோய் தடுப்பு மருந்து ஆய்வில் இது ஒரு மைல்கல் கண்டுபிடிப்பு என கூறும் விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் புற்றுநோய் வராமலே நம்மால் தடுக்க முடியும் என்பதற்கான ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை இந்த மருந்து தந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த மருந்தினை உடலில் செலுத்திக் கொண்ட பிறகு இது நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு புற்றுநோய் கட்டிகளாக மாறும் தன்மை கொண்ட செல்கள் உருவாகும் போதே அவற்றைக் கண்டறிந்து அழிப்பதற்கான திறன்களை வழங்கி விடுமாம். ஒரு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் என மட்டும் இல்லாமல் பெரும்பாலான வகையிலான புற்றுநோய் செல்களையும் இது கண்டுபிடித்து அழிக்கும் திறன் கொண்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எலிகள் மீது இந்த மருந்தினை செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்று இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த தடுப்பு மருந்து புதிதாக புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுப்பது மட்டுமில்லாமல் அது பெருக்கமடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதையும் தடுக்கிறதாம். பொதுவாகவே ஒருவரது உடலில் புற்றுநோய் கட்டிகள் வளர தொடங்கினாலே அவை படிப்படியாக உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பரவி அவற்றை செயல் இழக்க செய்து விடுகின்றன. இதுதான் பலரையும் நாம் காப்பாற்ற முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதையே இது தடுக்கிறது என்றால் இது ஒரு சூப்பர் தடுப்பு மருந்து தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
இந்த மருந்து சோதனை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. இது மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இருந்தாலும் புற்றுநோய் ஆய்வில் இது முக்கியமான மைல்கல், இதன் மூலம் லட்சக்கணக்கான மனிதர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications