இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக சாமானிய மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்து முறை தான் ரயில் பயணம். சவுகரியமான பயணம் , குறைந்த டிக்கெட் கட்டணம் ஆகிய இரண்டும் தான் பெரும்பாலான மக்களின் விருப்பமான போக்குவரத்து முறையாக ரயில் பயணங்கள் நீடிக்க காரணம்.
ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் சாதாரண மக்களும் எளிமையாக டிக்கெட் பெறுவதை உறுதி செய்யவும் இந்திய ரயில்வே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் தான் தட்கல் ரயில் டிக்கெட் பதிவுகளுக்கான முறையில் பெரிய மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்தது.

தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு ஆதார் பதிவு கட்டாயம் என்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி வாயிலாக ஓடிபி சரிபார்ப்பு கட்டாயம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. ஏஜெண்டுகள் பல்க்காக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதால் சாதாரண மக்களுக்கு அவை கிடைப்பதில்லை என தொடர்ச்சியாக எழுந்த புகாரை எடுத்து தான் இந்த இந்திய ரயில்வே இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது.
இப்போது தட்கல் டிக்கெட் பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டு அடையாள சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், அதே போல டிக்கெட் பதிவின் போதும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி சரிபார்ப்பு செய்யப்படுவதும் கட்டாயமாகியுள்ளது. தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்கள் சாமானிய மக்களே டிக்கெட் பதிவு செய்ய முடியும், முகவர்கள் முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட் பதிவு செய்ய முடியாது.

தட்கல் டிக்கெட் பதிவு முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றம் ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே பொது டிக்கெட் முன்பதிவிலும் இதே போன்ற ஒரு மாற்றத்தை ரயில்வே கொண்டு வர உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இந்திய ரயில்வே பொது டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சாமானிய மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படுவதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தவறான வழிகளில் டிக்கெட் எடுப்பவர்கள் தடுக்கப்பட வேண்டும், சாதாரண மக்களுக்கு டிக்கெட்டுகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த மாற்றம் அமலாகிறது.
அக்டோபர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ஆதார் அங்கீகாரம் செய்த பயணிகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய விரும்புவோர் தங்களின் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்து அடையாள சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்.
ஆதார் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகள் வாயிலாக மட்டுமே பொது டிக்கெட் முன்பதிவும் இனி மேற்கொள்ள முடியும். முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்கள் ஆதாரையும் ஐஆர்சிடிசி கணக்கையும் இணைந்திருந்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முதல் 10 நிமிடங்களுக்கு டிக்கெட் பதிவு செய்ய முடியாது.
அதே வேளையில் பிஆர்எஸ் எனப்படும் ரயில் நிலையங்களில் இருக்கும் கணினி முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம் போல சென்று டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். இது இணையதளம் அல்லது செயலி வாயிலாக ரிசர்வேஷன் செய்பவர்களுக்கே பொருந்தும். எனவே அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்து கொண்டால் தடையின்றி டிக்கெட்களை பெறலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications