இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நிறுவனத்தின் துணைத் தலைவரும் இயக்குனருமான எம்கே ஹமீத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக செப்டம்பர் 3ஆம் தேதியிட்டு எம் கே ஹமீத் எழுதியுள்ள கடிதத்தில் வரும் அக்டோபர் 29ஆம் தேதி தேதியிலிருந்து தான் சிப்லா நிறுவன துணை தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து விலகப்போவதாக கூறியுள்ளார்.
மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் சிப்லா நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதனிடையே அவரது ராஜினாமாவை ஏற்பதாக சிப்லா நிறுவனத்தின் வாரியக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்கே ஹமீத் ராஜினாமாவை தொடர்ந்து ஜெயினலு பாய் மற்றும் அபிஜித் ஜோஸி ஆகியோர் கூடுதல் இயக்குனர்களாக செயல்படுவார்கள் என்றும், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து கமில் ஹமீது இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தன்னுடைய ராஜினாமா தொடர்பாக கடிதம் எழுதியிருக்கும் எம் கே ஹமீத், 47 ஆண்டு காலமாக சிப்லா நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு வகித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது எனக் கூறியுள்ளார்.
எம்கே ஹமீத்தின் அறிவிப்பை தொடர்ந்து சிப்லா நிறுவனத்தின் பங்குகள் 0.2 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு மதிப்பு 1650 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. சிப்லா நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து விடை பெறுவது என்பது மிக கடினமான ஒரு முடிவு இருந்தாலும் என்னுடைய வயது முதிர்வு மற்றும் உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவினை எடுத்திருப்பதாக எம்கே ஹமீத் தெரிவித்துள்ளார்.
சிப்லா நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1, 34, 000 கோடி ரூபாய் ஆகும் . எம் கே ஹமீத் மும்பை பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்.
தற்போது 83 வயதாகும் இவருக்கு 12,597 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. 1935 ஆம் ஆண்டு இவரது தந்தை அப்துல் ஹமீத் தான் சிப்லா நிறுவனத்தை தொடங்கினார். 1972 ஆம் ஆண்டு முதல் எம்கே ஹமீதும், அவரது சகோதரரும் சிப்லா நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.
எம் கே ஹமீத் ராஜினாமாவை தொடர்ந்து அவரது வாரிசுகள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பினை ஏற்க உள்ளனர். இதனை அடுத்து நிறுவன பொறுப்புகளில் சில மாற்றங்கள் வரலாம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications