மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது ஏன் தெரியுமா..?

பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவில் பட்ஜெட் தினம். மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாத இறுதியில் தான் தாக்கல் செய்யப்பட்டது. அது ஏன் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. பொதுவாக நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது ஏன் தெரியுமா..?

2017 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி இறுதியில் இல்லாமல் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே இனி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து வெளிவந்துவிட்டது தற்போது சுயசார்பு கொண்ட நாடாக இருக்கிறது, இன்னும் ஏன் நாம் ஆங்கிலேய கால நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அப்போது குறிப்பிட்ட அருண் ஜேட்லி இனி பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

மேலும் நிதியாண்டு என்பது ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு இடையில் ஒரு மாத காலமே இருப்பதால் நிதி சார்ந்த மாற்றங்களை கொண்டு வர நேரம் கிடைப்பதில்லை என கூறினார். எனவே பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது நிதி ரீதியான சில மாற்றங்களை கொண்டு வருவது அரசுக்கு எளிதாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் யூனியன் பட்ஜெட் தனியாகவும், ரயில்வே துறைக்கான பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டது . 2017 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து அருண் ஜெட்லி ரயில்வே பட்ஜெட்டையும் மத்திய பட்ஜெட்டை ஒரே பட்ஜெட்டாக இணைத்தார். அப்போதிலிருந்து யூனியன் பட்ஜெட்டும் மதிய பட்ஜெட்டுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

அதே போல மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரமும் 1999 ஆம் ஆண்டு வரை மாலை 5 மணி ஆகத்தான் இருந்தது. கடந்த 1999 ஆம் ஆண்டு தான் இந்த நடைமுறை காலை 11 மணிக்கு என மாற்றம் செய்யப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டனில் பகல் நேரமாக இருக்கும் போது தான் இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்ததால் அங்கே பகல் 12:30 மணி ஆகும்போது இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறி மாலை 5 மணிக்கு தாக்கல் செய்தனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+