இந்திய பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள்! ரூ.1 லட்சம் கோடி டூ ரூ.15 லட்சம் கோடி!

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டாளருக்கு தொடர்ந்து லாபம் தருபவையாகவே இருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த நிறுவனங்கள் தங்களின் சந்தை மூலதன அடிப்படையிலும் பெரிய மைல்கற்களை எட்டியுள்ளன. அந்த வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் முதல் 15 லட்சம் கோடி ரூபாய் வரை சந்தை மூலதனத்தை கொண்டிருக்கும் முக்கிய நிறுவனங்களின் பட்டியலை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

 இந்திய பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள்! ரூ.1 லட்சம் கோடி டூ ரூ.15 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள்:
1.டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் (Indian Hotels Company Limited (IHCL)). இதன் கீழ் தான் தாஜ் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.
2. டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (Dr. Reddy's Laboratories) இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனம் இது.
3. இன்ஃபோ எட்ஜ்ஸ் (Info Edge India) முன்னணி தளங்களான Naukri.com மற்றும் 99acres.com ஆகியவற்றின் தாய் நிறுவனம் இது.
4. ஆரக்கிள் ஃபைனான்ஸ் (Oracle Financial Service) நிதி சேவைகளுக்கான மென்பொருள்களை வழங்கும் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது.
5. மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders) கப்பல்கள் கட்டுமானத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும்.
6. டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் (Tata Consumer Products) டாடா குழுமத்தில் எஃப்எம்சிஜி பிரிவில் இயங்கும் நிறுவனம்
7. டாடா பவர் (Tata Power) நீடித்த நிலைத்தன்மை கொண்ட எரிசக்தி தீர்வுகளில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

ரூ. 5 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள்:
1.ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐடி நிறுவனமாகவும் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நிறுவனமாகவும் இருக்கிறது.
2. லார்சன் & டப்ரோ (Larsen & Toubro (L&T) பொறியியல், கட்டுமானம், பராமரிப்பு ஆகிய பிரிவில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனம் ஆகும்.
3. எல்ஐசி (Life Insurance Corporation of India (LIC)) இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும்.

ரூ.10 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள்:
1.பாரதி ஏர்டெல் (Bharti Airtel) இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனம் ஆகும்.

ரூ.15 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள்:
1. டிசிஎஸ் (Tata Consultancy Services (TCS)) டாடா குழுமத்திற்கு சொந்தமான உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனம். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் வழங்கும் நிறுவனம்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+